நகரா முரசு மண்டபம்
(நகரா மண்டபம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நகரா மண்டபம் மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு சன்னதி நேர் எதிரில் அமைந்த சிறிய மண்டபம். மீனாட்சியம்மன் பூஜையின் போது இம்மண்டபத்தில் உள்ள நகரா முரசு நாள்தோறும் அதிகாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும், மாலை 4.30 மணி முதல் ஐந்து மணி வரையும் கொட்டப்படும். இம்மண்டபம் நகரா முரசு அடிக்கப் பயன்படுவதால் இம்மண்டபத்திற்கு நகரா மண்டபம் எனப் பெயராயிற்று.
மதுரை நாயக்க மன்னர் அச்சுதராயர் காலத்தில் நகரா மண்டபம் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இம்மண்டபத்தில் தற்போது சில வணிகக் கடைகள் உள்ளது.
படக்காட்சியகம்தொகு
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- Madurai - Athens of the East பரணிடப்பட்டது 2016-02-19 at the வந்தவழி இயந்திரம்