கா. ந. தண்டாயுதபாணி பிள்ளை
காரைக்கால் நடேசன் தண்டாயுதபாணி பிள்ளை (Karaikal Natesan Dhandayudhapani Pillai) (பிறப்பு: 1921 சூலை 14, காரைக்கால் - 1974 அக்டோபர் 12) ஓர் இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞரும், நடன இயக்குனருமாவார். இவர் பரதநாட்டியத்தின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக பலரால் கருதப்படுகிறார். இவர் ஒரு ஆசிரியராகவும் பல கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார்.
கா. ந. தண்டாயுதபாணி பிள்ளை | |
---|---|
பிறப்பு | காரைக்கால் புதுச்சேரி, இந்தியா | 14 சூலை 1921
இறப்பு | 12 அக்டோபர் 1974 | (அகவை 53)
பணி | நடனக் கலைஞர் நடன இயக்குனர் |
அறியப்படுவது | பரதநாட்டியம் |
வாழ்க்கைத் துணை | சந்திரா தண்டாயுதபாணி பிள்ளை |
பிள்ளைகள் | மருத்துவர். உமா ஆனந்த் |
விருதுகள் | பத்மசிறீ, நாட்டியகலா சக்ரவர்த்தி, கலைமாமணி விருது, நாட்டிய கலாநிதி |
தொழில்
தொகுஇந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் அறியப்பட்ட இசைக்கலைஞரான ஏ. கே. நடேசன் பிள்ளை என்பவருக்கு 1921 சூலை 14 அன்று பிறந்தார். ஆரம்பத்தில் தனது தந்தையின் கீழ் இசையில் பயிற்சி பெறத் தொடங்கினார். ஆனால் பின்னர் பரதநாட்டியத்த்தை கற்று தந்து வந்த தனது தாத்தாவின் கீழ் பயிற்சியினை மேற்கொள்ளத் தொடங்கினார்.[1] பின்னர், இதைத் தொடர்ந்து, ருக்மணி தேவி அருண்டேலின் கலாசேத்திராவில் ஆசிரியராக சேர்ந்தார். அங்கு இவர் பல ஆண்டுகள் கற்பித்தார். இவர் பரதநாட்டியத்திற்காக பல பாடல்களையும் எழுதியுள்ளார்.[2][3] மேலும், பல மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்தார். இவரது சீடர்களில் ஸ்ரீவித்யா, ஜெ. ஜெயலலிதா, ஹேமா ராஜகோபாலன், சுகந்தி சத்யனே, நயனா செனாய்,[4] அடையார் கே. லட்சுமணன்,[5] உமா முரளிகிருட்டிணா, விஜயலட்சுமி செட்டி-அகுஜா,[6] ஜெயலட்சுமி ஆல்வா,[7] கீதா சந்திரன் [8] போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ராஜா குருவ்[9] நாயகன்-மௌஜி, சாயா, ஓம் பஞ்சி ஏக் தால் கே, சிறீ காலகஸ்தீஸ்வர மகாத்மியம், பாய்-பாய் போன்ற பல படங்களின் நடன நடன இயக்குனராகவும் இருந்தார்.[10] இவர் 1967 இல் சென்னையில் "சிறீ இராம நாடக நிகேதன்" என்ற நடனப் பள்ளியையும் நிறுவினார்.[11] 1971 ஆம் ஆண்டில், நடனத்திற்காக இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு இவருக்கு குடிமகன்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த கௌரவமான பத்மசிறீ விருதினை வழங்கியது.[12]
சொந்த வாழ்க்கை
தொகுஇவரது மனைவி சந்திரா தண்டாயுதபணி பிள்ளை, அறியப்பட்ட பரதநாட்டிய நிபுணராகவும், ஆசிரியராகவும் இருக்கிறார்.[13] மேலும், 2005 இல் இறந்த இவரது தம்பி, தட்சிணாமூர்த்தி பிள்ளையும் ஒரு குறிப்பிடத்தக்க பாரதநாட்டிய ஆசிரியராக இருந்தார்.[14]
இறப்பு
தொகுஅமெரிக்காவில் ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு சென்று, 1974 அக்டோபர் 4 ஆம் தேதி திரும்பிய பிறகு, தனது மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் மார்பு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 12 அன்று தனது 53 வயதில் இறந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ Hema Rajagopalan (26 March 2016). "K. N. Dandayudhapani Pillai Baani". Remembrance. Narthaki. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Compositions of K.N.Dandayudapani Pillai". Indian Heritage. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Dance rich in rhythm". 3 September 2004. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Nayana Shenoy". Shivam School of Dance. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Adyar K. Lakshman speaks to S. Janaki" (PDF). Sruti. May 2011. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "About Guru". Natraj Dance. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Noted Bharatanatyam dancer Jayalakshmi Alva passes away". 22 July 2015. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Short Bio" (PDF). Geeta Chandran. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Raja Guruvu". The Southern Nightingale. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Dandayudapani Pillai on IMDb". Internet Movie Database. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Sri Rama Nataka Niketan". Sri Rama Nataka Niketan. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
- ↑ "Birth anniversary celebrated". Carnatica.net. 17 December 2001. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- ↑ His grandson, Karthik Balaji is currently pursuing Engineering from Bharati Vidyapeeths college of Engineering."Delhi based dance guru Dakshinamoorthy Pillai passes away". Kutcherri Buzz. 27 April 2005. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கா. ந. தண்டாயுதபாணி பிள்ளை
- "Dandayudhapani Pillai Nataikuranji Varnam by dancer Geeta Chandran". YouTube video. Geeta Chandran. 26 July 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.