சதாரம் 1956-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] வி. சி. சுப்பராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சதாரம்
சதாரம் விளம்பரம்
இயக்கம்வி. சி. சுப்பராமன்
தயாரிப்புவி. சி. சுப்பராமன்
கதைஏ. கே. வேலன்,
ஏ. டி. கிருஷ்ணசாமி (வசனம்)
இசைஜி. ராமநாதன்
நடிப்புபி. பானுமதி
கே. ஆர். ராமசாமி
ஜெமினி கணேசன்
ஒளிப்பதிவுபி. சிறீதர்
கலையகம்கஸ்தூரி பிலிம்சு
விநியோகம்கஸ்தூரி பிலிம்சு
வெளியீடு13 ஏப்ரல் 1956[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

சங்கரதாசு சுவாமிகள் புராணங்கள், இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளிலிருந்து கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, இந்தியப் பெண்ணின் உன்னத பண்புகளை எடுத்துக்காட்டும் ஒரு பிரபலமான நாடகமாக இக்கதையை மேடையேற்றினார். பி. யு. சின்னப்பா இந்த நாடகத்தில் சிறு வயதில் ஒரு திருடனாக நடித்துப் பாராட்டு பெற்றார். இந்நாடகம் 1930 இல் ஓர் ஊமைப்படமாக தயாரிக்கப்பட்டது. பின்னர் 1935 இல் நவீன சதாரம் என்ற பெயரில் மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தினரால் பேசும் படமாகத் தயாரிக்கப்பட்டது. கே. சுப்பிரமணியம் இயக்கிய இந்தப் படத்தில் ஜி. பட்டு ஐயர், எஸ். எஸ். மணி பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, பார்வதிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். இதே கதை 1956 இல் மூன்றாவது தடவையாக வி. சி. சுப்பராமனின் முயற்சியில் தயாரிக்கப்பட்டது.

பாடல்கள் தொகு

சதாரம் திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி ஆகியோர் எழுதியிருந்தனர். கே. ஆர். ராமசாமி, பானுமதி, கே. சாரங்கபாணி, வி. கே. ராமசாமி, டி. எம். சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், ஜிக்கி, கே. ஜமுனா ராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பாடினர்.

இல. பாடல் பாடியவர்(கள்) வரிகள் நீளம் (நி:செசெ)
1 "பொங்கி வரும் புது நிலவே" டி. எம். சௌந்தரராஜன், பானுமதி 03:11
2 "அங்கும் இங்கும் பார்த்திடாமல்" ஜிக்கி 05:19
3 "ராஜாத்தி கண்ணே ராஜாத்தி" கே. ஆர். ராமசாமி 02:42
4 "அன்னையே காளியம்மா ஈஸ்வரி" டி. எம். சௌந்தரராஜன், வி. டி. ராஜகோபாலன்,
ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா
05:46
5 "அழகு பிரமச்சாரி வாரும் ஐயா" கே. ஜமுனா ராணி 02:29
6 "சுண்டல்.... காயம் கருவப்பிலை சூடண்டி" எஸ். சி. கிருஷ்ணன், கே. சாரங்கபாணி 02:25
7 "எங்கும் ஒளி வீசுதே என்னைத் தேடி" பி. பானுமதி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா 03:10
8 "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே" டி. எம். சௌந்தரராஜன் அ. மருதகாசி 03:11
9 "லாப நஷ்டமாடா நைனா" சீர்காழி கோவிந்தராஜன், வி. கே. ராமசாமி 02:11
10 "நாலு வாக்கு நீ கொடடி" கே. ஆர். ராமசாமி 01:32
11 "மதியாதார் வாசல்...மண் மீது மானம்" திருச்சி லோகநாதன் 02:54
12 "புதுமை என்ன சொல்வேன்" டி. எம். சௌந்தரராஜன் 03:24
13 "தாயே ஏழை முகம்" பி. பானுமதி
14 "வில்லாதி வில்லனடா.... துள்ளாட்டம் போட்டதெல்லாம்" கே. ஆர். ராமசாமி 02:39

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாரம்&oldid=3795248" இலிருந்து மீள்விக்கப்பட்டது