ராஜாம்பாள் (1951 திரைப்படம்)

ராஜாம்பாள் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசுவாமியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், மாதுரி தேவி, எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ராஜாம்பாள்
இயக்கம்ஆர். எம். கிருஷ்ணசுவாமி
தயாரிப்புஅருணா பிலிம்ஸ்
கதைஜே. ஆர். ரெங்கராஜு
இசைஎஸ். பாலச்சந்தர்
நடிப்புஆர். எஸ். மனோகர்
மாதுரி தேவி
பி. கே. சரஸ்வதி
கே. சாரங்கபாணி
எஸ். பாலச்சந்தர்
‘பிரண்டு’ ராமசாமி
சி. ஆர். ராஜகுமாரி
டி. பி. முத்துலட்சுமி
ஒளிப்பதிவு-
விநியோகம்-
வெளியீடு1951
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே. ஆர். ரங்கராஜூவின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ. டி. கிருஷ்ணசுவாமி.[1] இதே கதை 1935 ஆம் ஆண்டில் ராஜாம்பாள் என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[1]

பி. கே. சரஸ்வதி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை எஸ். பாலச்சந்தர் இதில் நடேசன் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 ராண்டார் கை (3 சனவரி 2009). "Rajambal 1951". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 

வெளியிணைப்புகள் தொகு