இரா. சு. மனோகர்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(ஆர். எஸ். மனோகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராசிபுரம். சுப்ரமணியன் ஐயர். மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (R. S. Manohar; 29 சூன் 1925 - 10 சனவரி 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

இராசிபுரம் சுப்ரமணியன் மனோகர்
R.S.Manohar.jpg
ஆர். எஸ். மனோகர் 1951
பிறப்புலட்சுமிநரசிம்மன்[1]
29 ஜூன் 1925
இராசிபுரம், சேலம் மாவட்டம், பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம்
இறப்புசனவரி 10, 2006(2006-01-10) (அகவை 80)
சென்னை
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
சீதாலட்சுமி மனோகர்

இளமைக்காலம்தொகு

இராசிபுரம் சுப்ரமணியன் ஐயர் மனோகர், 1925-ஆம் ஆண்டு சூன் 29-ஆம் தேதி அன்றைய சேலம் மாவட்டம், ராசிபுரத்தில், பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணத்தில் சுப்ரமணியன் ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமிநரசிம்மன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள்தொகு

நாடகங்கள்தொகு

மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

விருதுகள்தொகு

இசைப்பேரறிஞர் விருது, 1987. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-06-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-04-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-24 அன்று பார்க்கப்பட்டது.
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சு._மனோகர்&oldid=3586207" இருந்து மீள்விக்கப்பட்டது