தாய்நாடு (1947 திரைப்படம்)
தாய்நாடு (Thaai Nadu) என்பது 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, எஸ். டி. வில்லியம்ஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
தாய்நாடு | |
---|---|
இயக்கம் | டி. எஸ். மணி |
தயாரிப்பு | எஸ். எம். நாயகம்[1] |
கதை | கதை டி. எஸ். மணி |
இசை | ஆர். நாராயண ஐயர் |
நடிப்பு | பாட்லிங் மணி எஸ். டி. வில்லியம்ஸ் வி. பி. எஸ். மணி டி. கே. கிருஷ்ணைய்யா எம். ஆர். சுந்தரி என். சி. மீரா |
வெளியீடு | ஆகத்து 15, 1947[2] |
ஓட்டம் | . |
நீளம் | 13960 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகுஇந்தப் பட்டியலானது பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[2]
- பாட்லிங் மணி
- எஸ். டி. வில்லியம்ஸ்
- வி. பி. எஸ். மணி
- டி. கே. கிருஷ்ணையா
- எம். ஆர். சுந்தரி
- என். சி. மீரா
தயாரிப்பு
தொகுஇத்திரைப்படத்தை முதன்முதலில் சிங்கள மொழி பேசும் படமான கடவுனு பொறந்துவவைத் தயாரித்த எஸ். எம். நாயகம் தனது சொந்த பதாகையான சித்ரகலா மூவிடோனின் கீழ் தயாரித்தார். படத்தை டி. எஸ். மணி இயக்கினார்.[1] டி. எஸ். மணி கதை திரைக்கதையை எழுத, உரையாடலை டி. வி. நடராஜசாமி எழுதினார். ஜி. ஜி. சித்தி ஒளிப்பதிவு செய்ய, ஆபிரகாம் படத்தொகுப்பை மேற்கொண்டார். கோட்வான்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, ஒளிப்படங்களை வி. வி. ஐயர் எடுத்தார்.[2]
பாடல்கள்
தொகுஇப்படத்திற்கு இசையமைத்தவர் ஆர். நாராயண ஐயர், பாடல் வரிகளை டி. வி. நடராஜ சாமி எழுதினார்.
- பாடல் பட்டியல்
- எங்கள் இந்திய பாரதியே - வி. என். சுந்தரம், ஏ. பி. கோமளா
வரவேற்பு
தொகுஇப்படம் குறித்து 2017 இல் ஊடகவியலாளர் டி. பி. எஸ்.ஜெயராஜ் எழுதுகையில், "படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது" என்று கூறினார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "First Sinhala Talkie "Broken Promise" was Released 70 Years Ago on Jan 21 1947". dbsjeyaraj.com. 26 January 2017. Archived from the original on 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2017.
- ↑ 2.0 2.1 2.2 Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 20 June 2018.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் எங்கள் இந்திய பாரதியே - வி. என். சுந்தரம், ஏ. பி. கோமளா கோமளா பாடிய படத்தின் பாடல்