பட்டினத்தார் (1936 திரைப்படம்)

பட்டினத்தார், 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசாவின் (முத்துசுவாமி ஐயர்) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், வி. என். சுந்தரம், பி. ஜி. வெங்கடேசன், டி. ஆர். முத்துலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.

பட்டினத்தார்
இயக்கம்முருகதாசா
தயாரிப்புவேல் பிக்சர்ஸ் எம். டி. ராஜன்
கதைடி. சி. வடிவேலு நாயக்கர்
இசைஎம். எம். தண்டபாணி தேசிகர்
நடிப்புஎம். எம். தண்டபாணி தேசிகர், வி. என். சுந்தரம், பி. ஜி. வெங்கடேசன், டி. ஆர். முத்துலட்சுமி
ஒளிப்பதிவுகே. ராம்நாத்
ஏ. கே. சேகர்
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தடிகளின் வரலாற்றை ஒட்டி மூன்று திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. முதலாவது 1935 ஆம் ஆண்டில் சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக வெளிவந்த 1935 பட்டினத்தார் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அடுத்த ஆண்டிலேயே தேசிகர் பட்டினத்தாராக நடித்த இத்திரைப்படம் வெளிவந்தது. பின்னர் 1962 இல் டி. எம். சௌந்தரராஜன் நடித்த 1962 பட்டினத்தார் படம் வெளிவந்தது. இந்த மூன்று திரைப்படங்களில் தேசிகர் நடித்த 1936 திரைப்படமே பெரு வெற்றியை அடைந்தது. சென்னை பிராட்வே திரையரங்கில் மட்டும் இது 25 வாரங்கள் ஓடியது.[1]

இத்திரைப்படத்தில் மொத்தம் 52 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. தண்டபாணி தேசி­கரே இசை­ய­மைத்து, பெரும்பாலான பாடல்களைப் பாடியிருந்தார்.

வேல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எம். டி. ராஜன் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். முருகதாசா என அழைக்கப்படும் முத்துசாமி ஐயர் (பிறப்பு: 1900) இதனை இயக்கியிருந்தார். கே. ராம்நாத், மற்றும் ஏ. கே. சேகர் ஆகியோரின் ஒளிப்பதிவில் வெளியானது. இத்திரைப்படத்தின் பிரதி இப்போது கிடைப்பதில்லை.[1]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு