முருகதாசா (பிறப்பு: 1900)[1] என்று அழைக்கப்பட்ட ஏ. முத்துசுவாமி ஐயர் 1930-40களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ஆவார்.[2] சுந்தரமூர்த்தி நாயனார் (1937), பட்டினத்தார் (1936), நந்தனார் (1942) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தொடக்கத்தில் இவர் சித்ரவாணி என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். இப்பத்திரிகையின் உதவி ஆசிரியராக பி. எஸ். இராமையா இருந்தார்.[2] சௌண்ட் அண்ட் ஷடோ (Sound and Shadow) என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். பின்னர் திரைப்படத் துறைக்கு வந்தார்.[3] ஏ. கே. சேகர், கே. ராம்நாத் போன்ற இயக்குநர்கள் இவருக்குக் கீழ் பணியாற்றினார்கள்.[2] 1956 இல் வெளிவந்த தெனாலி ராமகிருஷ்ணா என்ற தெலுங்குத் திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார். 1963 இல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இயக்கிய திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ராண்டார் கை (17 அக்டோபர் 2008). "Pattinathaar 1936". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2014.
  2. 2.0 2.1 2.2 தமிழ் பட டைரக்டர்கள், ம. க. த., ஹனுமான் 1939 ஆண்டு மலர், பக் 134
  3. "Remembering Ramnoth". தி இந்து. 3 நவம்பர் 2006. Archived from the original on 28 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகதாசா&oldid=3867760" இலிருந்து மீள்விக்கப்பட்டது