மாலையிட்ட மங்கை

மாலையிட்ட மங்கை என்பது 1958 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கவிஞர் கண்ணதாசனின் நிறுவனமான, கண்ணதாசன் பிலிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தை ஜி. ஆர். நாதன் இயக்கியிருந்தார். டி. ஆர். மகாலிங்கம், பண்டரிபாய், மனோரமா, மைனாவதி, பத்மினி பிரியதரிசினி, காகா ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விசுவநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[1] இந்தப் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியிருந்தார்.

மாலையிட்ட மங்கை
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புகண்ணதாசன்
கதைகண்ணதாசன்
அய்யாப்பிள்ளை
இசைவிசுவநாதன் - ராமமூர்த்தி
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பண்டரி பாய்
மனோரமா
மைனாவதி
காகா ராதாகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
வெளியீடு1958
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

படத்தின் சிறப்புகள்தொகு

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனை படைத்த நடிகை மனோரமா இந்தத் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். இத்திரைப்படம் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த திரைப்படமாகும். இந்தப் படத்தில் இருந்துதான் கண்ணதாசன் ஒரு பாடல் ஆசிரியராக புகழ் பெற்றார்.இந்தப் படத்தில் இடம் பெற்ற பதினைந்து பாடல்களும் மிகப் பிரபலமாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. திரைப் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த திரு டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் புகழ்பெற்றார்.

பாடல்கள்தொகு

விசுவநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் எழுதியவை.

இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் பாடிய "செந்தமிழ் தேன்மொழியாள்" எனும் பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்ற சிறப்பான பாடலாகும்.

மேற்கோள்கள்தொகு

  1. http://www.maalaimalar.com/2013/12/02220907/Manorama-introduced-Kannadhsan.html மாலையிட்ட மங்கை திரைப்படம்- மாலைமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலையிட்ட_மங்கை&oldid=2706750" இருந்து மீள்விக்கப்பட்டது