என். என். கண்ணப்பா

தமிழ்த் திரைப்பட நடிகர்

என். என். கண்ணப்பா (N. N. Kannappa) ஒரு இந்திய தமிழ் நாடக, திரைப்பட நடிகராவார். பெரும்பாலும் நாடகங்களில் நடித்து வந்தவர் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். நவசக்தி என்ற தனது சொந்த நாடகக் குழு மூலம் பல நாடகங்களைத் தயாரித்து அரங்கேற்றியுள்ளார். மேலும் இவர் அகில இந்திய வானொலியின் (அனைத்திந்திய வானொலி) பல நாடகங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

டவுன் பஸ் திரைப்படத்தில் என். என். கண்ணப்பா

நடித்த திரைப்படங்கள்தொகு

  1. தேவகி (1951) முதல் திரைப்படம். வி. என். ஜானகி ஜோடியாக நடித்தார்.[1]
  2. மனிதனும் மிருகமும் (1953)
  3. நால்வர் (1953)[2]
  4. டவுன் பஸ் (1955) அஞ்சலிதேவி ஜோடியாக நடித்தார்[3]
  5. நன்னம்பிக்கை (1956)
  6. படித்த பெண் (1956)
  7. மாலா ஒரு மங்கல விளக்கு (1959)
  8. தாமரைக்குளம் (1959)[4]
  9. தந்தைக்குப்பின் தமையன் (1960)
  10. கப்பலோட்டிய தமிழன் (1961) வ. உ. சிதம்பரம் பிள்ளையின் தம்பி கதாபாத்திரம்
  11. தெய்வத்தின் தெய்வம் (1962)
  12. நினைப்பதற்கு நேரமில்லை (1963) போலீஸ் இன்ஸ்பெக்டராக கௌரவ வேடம்
  13. இரத்தத் திலகம் (1963) சீன நாட்டு டாக்டர் கதாபாத்திரம்

விருதுதொகு

தமிழக அரசு சிறந்த நாடக நடிகருக்கான 1965-66 கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.[5]

உசாத்துணைதொகு

  1. "Devaki 1951". தி இந்து. 6 பெப்ரவரி 2009. 26 ஜனவரி 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 ஜனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Naalvar 1953". தி இந்து. 18 மார்ச் 2012. 26 ஜனவரி 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 ஜனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. கை, ராண்டார் (18 ஆகஸ்ட் 2012). "Town Bus 1953". தி இந்து. 17 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 ஜனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Thamarai Kulam 1959". தி இந்து. 16 மே 2015. 2016-11-10 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 ஜனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி விருது பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் சிறந்த நாடகக்குழுக்கள் பட்டியல். தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம், சென்னை-28. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._என்._கண்ணப்பா&oldid=3671095" இருந்து மீள்விக்கப்பட்டது