கிருஷ்ணன்-பஞ்சு
கிருஷ்ணன்-பஞ்சு ஓர் இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்கள் ஆவர். ரா. கிருஷ்ணன் (1909–1997) மற்றும் சா. பஞ்சு (1915–1984) ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியிருந்தனர்.[1]
ரா. கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | மதராசு (தற்போதைய சென்னை), மதராசு மாகாணம் | 18 சூலை 1909
இறப்பு | 17 சூலை 1997 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 87)
பணி | படத்தொகுப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1944-1997 |
பிள்ளைகள் | கஸ்தூரி, லலிதா, சந்திரமோகன், முரளி, மதுரம், மனோகர், உளாஸ், சிவாஜி, பராசக்தி, கே. சுபாஷ் |
சா. பஞ்சு | |
---|---|
பிறப்பு | உமையாள்புரம், கும்பகோணம், தமிழ்நாடு | 24 சனவரி 1915
இறப்பு | 6 ஏப்ரல் 1984 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 69)
மற்ற பெயர்கள் | பஞ்சாபி |
பணி | படத்தொகுப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1944–1984 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதொடக்க கால வாழ்க்கை
தொகுரா. கிருஷ்ணன் 1909 சூலை 18 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார்.[2] தொடக்கத்தில், கோவையில் செயல்பட்டு வந்த பக்சிராஜா ஸ்டுடியோவில் (அப்போதைய கந்தன் ஸ்டுடியோ) பணியாற்றினார்.[3]
சா. பஞ்சு 1915 சனவரி 24 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரத்தில் பிறந்தார்.[2] தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.[3][4][5]
மறைவு
தொகு1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[6] பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காதிருந்த ரா. கிருஷ்ணன், 1997 சூலை 17 அன்று தனது 87 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[1]
இயக்கிய திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | தயாரிப்பு | குறிப்புகள் |
---|---|---|---|---|
1944 | பூம்பாவை | தமிழ் | லியோ பிக்சர்சு | |
1947 | பங்கஜவல்லி | தமிழ் | தமிழ்நாடு டாக்கீஸ் | |
1947 | பைத்தியக்காரன் | தமிழ் | என். எசு. கே. பிக்சர்சு | எம். ஜி. இராமச்சந்திரன் துணை வேடத்தில் நடித்த திரைப்படம் |
1949 | ரத்தினகுமார் | தமிழ் | முருகன் டாக்கீஸ் | |
1949 | நல்ல தம்பி | தமிழ் | என்.எசு.கே. பிலிம்சு, உமா பிக்சர்சு | கா. ந. அண்ணாதுரை திரைக்கதை ஆசிரியராக அறிமுகமான திரைப்படம் |
1952 | பராசக்தி | தமிழ் | நேசனல் பிக்சர்சு | சிவாஜி கணேசன் அறிமுகமான திரைப்படம் |
1953 | கண்கள் | தமிழ் | மோசன் பிக்சர்சு குழு | |
1954 | ரத்தக்கண்ணீர் | தமிழ் | நேசனல் பிக்சர்சு | |
1955 | சந்தா சகு | கன்னடம் | ||
1956 | குலதெய்வம் | தமிழ் | ||
1957 | புதையல் | தமிழ் | கமல் சகோதரர்கள் | |
1957 | பாபி | இந்தி | ஏவிஎம் தயாரிப்பகம் | குலதெய்வம் தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கம் |
1958 | மாமியார் மெச்சின மருமகள் | தமிழ் | ||
1959 | பர்க்கா | இந்தி | ஏவிஎம் தயாரிப்பகம் | |
1960 | திலகம் | மலையாளம் | ||
1960 | தெய்வப்பிறவி | தமிழ் | ||
1960 | பிந்த்யா | இந்தி | தெய்வப்பிறவி தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கம் | |
1961 | சுகா சிந்தூர் | இந்தி | ||
1962 | சாதி | இந்தி | ||
1962 | மேன் மௌஜி | இந்தி | ஏவிஎம் தயாரிப்பகம் | |
1963 | குங்குமம் | தமிழ் | ராசாமணி பிக்சர்சு | |
1964 | வாழ்க்கை வாழ்வதற்கே | தமிழ் | கமல் சகோதரர்கள் | |
1964 | சர்வர் சுந்தரம் | தமிழ் | ஏவிஎம் தயாரிப்பகம் | |
1964 | மேரா குசார் கியா கை | இந்தி | ||
1965 | குழந்தையும் தெய்வமும் | தமிழ் | ஏவிஎம் தயாரிப்பகம் | |
1966 | பெற்றால்தான் பிள்ளையா | தமிழ் | ||
1966 | லேத மனசுலு | தெலுங்கு | ஏவிஎம் தயாரிப்பகம் | |
1966 | லாலா | இந்தி | அன்னை திரைப்படத்தின் மறுஆக்கம் | |
1968 | டு கலியான் | இந்தி | ஏவிஎம் தயாரிப்பகம் | குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தின் மறுஆக்கம் |
1968 | உயர்ந்த மனிதன் | தமிழ் | ||
1969 | அன்னையும் பிதாவும் | தமிழ் | ||
1970 | எங்கள் தங்கம் | தமிழ் | ||
1970 | அனாதை ஆனந்தன் | தமிழ் | ||
1971 | மெயின் சுந்தர் கூன் | இந்தி | சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் மறுஆக்கம் | |
1972 | பிள்ளையோ பிள்ளை | தமிழ் | ||
1972 | இதய வீணை | தமிழ் | ||
1972 | அக்கா தம்முடு | தெலுங்கு | ஏவிஎம் தயாரிப்பகம் | |
1973 | பூக்காரி | தமிழ் | ||
1974 | சமையல்காரன் | தமிழ் | பவார்ச்சி திரைப்படத்தின் மறுஆக்கம் | |
1974 | சந்தார் | |||
1974 | பத்து மாத பந்தம் | தமிழ் | ||
1974 | கலியுகக் கண்ணன் | தமிழ் | ||
1975 | வாழ்ந்து காட்டுகிறேன் | தமிழ் | ||
1975 | காசுமீர் பல்லோடு | தெலுங்கு | ||
1975 | அணையா விளக்கு | தமிழ் | ||
1976 | வாழ்வு என் பக்கம் | தமிழ் | ||
1976 | இளைய தலைமுறை | தமிழ் | ||
1976 | என்ன தவம் செய்தேன் | தமிழ் | ||
1977 | சொன்னதைச் செய்வேன் | தமிழ் | ||
1977 | சக்ரவர்த்தி | |||
1978 | பேர் சொல்ல ஒரு பிள்ளை | தமிழ் | ||
1978 | அன்னபூரணி | |||
1979 | வெள்ளி ரதம் | தமிழ் | ||
1979 | நீலமலர்கள் | தமிழ் | ||
1979 | நாடகமே உலகம் | தமிழ் | ||
1980 | மங்கள நாயகி | |||
1985 | மலரும் நினைவுகள் | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Film director Krishnan dead". Indian Express. 17 July 1997. Archived from the original on 26 April 2013. பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ 2.0 2.1 Sanjit Narwekar (1994). Directory of Indian film-makers and films. Flicks Books. p. 156.
- ↑ 3.0 3.1 Randor Guy (31 July 2011). "Kuzhandaiyum Deivamum 1965". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kuzhandaiyum-deivamum-1965/article2309453.ece. பார்த்த நாள்: 3 March 2014.
- ↑ Randor Guy (1 March 2014). "Araichimani or Manuneethi Chozhan (1942)". The Hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/araichimani-or-manuneethi-chozhan-1942/article5740206.ece. பார்த்த நாள்: 3 March 2014.
- ↑ "Manamagal 1951". தி இந்து. 15 August 2008 இம் மூலத்தில் இருந்து 13 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140313045202/http://www.hindu.com/cp/2008/08/15/stories/2008081550391600.htm. பார்த்த நாள்: 16 March 2014.
- ↑ "பராசக்தி உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய கிருஷ்ணன்- பஞ்சு" (in Tamil). மாலை மலர். 26 December 2011 இம் மூலத்தில் இருந்து 4 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Np4HeMNR?url=http://cinema.maalaimalar.com/2011/12/26192924/parasakthi-director-krishnan-p.html.