கண் கண்ட தெய்வம்
கண் கண்ட தெய்வம் (Kan Kanda Deivam) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பைய்யா, பத்மினி, நாகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இத்திரைப்படம் 15 செப்டம்பர் 1967 இல் வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் பாந்தவியாலு (1968) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
கண் கண்ட தெய்வம் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். வி. ரங்கராவ் பத்மினி எஸ். வி. சுப்பையா நாகேஷ் |
ஒளிப்பதிவு | ஆர். சம்பத் |
படத்தொகுப்பு | ஆர். தேவன் |
கலையகம் | கமால் பிரதர்ஸ் |
விநியோகம் | ஜெய் மாருதி கம்பைன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 15, 1967 |
ஓட்டம் | 174 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- நில உரிமையாளராக எஸ். வி. ரங்கராவ்
- நில உரிமையாளரின் தம்பி மனைவியாக பத்மினி
- நில உரிமையாளரின் தம்பியாக எஸ். வி. சுப்பையா
- வழக்கறிஞராக நாகேஷ்
- பக்கத்து வீட்டு சாமியாராக சித்தூர் வி. நாகையா
- குற்றவாளியாக ஓ. ஏ. கே. தேவர்
- குற்றவாளியின் உதவியாளராக எஸ். ராமராவ்
- வேலைக்காரனாக சிவகுமார்
- நீதிபதியாக எஸ். வி. சகஸ்ரநாமம்
- மூத்த ம்கனாககள்ளபார்ட் நடராஜன்
- நடு மகனாக மகாரன்
- இளைய மகனாக ஏ. வீரப்பன்
- மகளாக விஜயராணி
தயாரிப்பு
தொகுகமல் பிரதர்ஸ் தயாரிப்பில்[4] கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.சம்பத்தும், படத்தொகுப்பாளராக ஆர்.தேவன் இருந்தனர். படத்தின் சில பாடல் காட்சிகள் விவசாயப் பின்னணியில் படமாக்கப்பட்டது. படத்தின் நீளம் 4845 மீட்டர் இருந்தது.
இசையமைப்பு
தொகுஉடுமலை நாராயண கவி மற்றும் வாலியின் வரிகளுக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]
பாடல் வரிகள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி" | பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் | ||||||||
2. | "வாழ்க்கை என்பது ஜாலி" | ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன், பொன்னுசாமி | ||||||||
3. | "தென்ன மரத்திலே" | டி. எம். சௌந்தரராஜன் | ||||||||
4. | "ஆண்டவனே சாமி" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா மற்றும் குழுவினர் |
வெளியீடும் வரவேற்பும்
தொகுகண் கண்ட தெய்வம் திரைப்படம் 1967 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது. ஜெய் மாருதி கம்பைன்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kankanda Deivam Tamil Film EP Vinyl Record by K V Mahadevan". Mossymart. Archived from the original on 24 October 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2022.
- ↑ Cowie, Peter; Elley, Derek (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. p. 267.
- ↑ "கண் கண்ட தெய்வம்". Kalki. 1 October 1967. p. 43. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ Randor Guy (1 June 2017). "Kan Kanda Deivam (1967)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170727101300/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/kan-kanda-deivam-1967/article18686080.ece.
- ↑ "1967_ கண்கண்ட தெய்வம்- கமால் பிரதர்ஸ்" [1967_ Kan Kanda Deivam- Kamal Brothers]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 27 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 July 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)