பாகப்பிரிவினை (திரைப்படம்)

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாகப்பிரிவினை (Bhaaga Pirivinai) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படம் 31 அக்டோபர் 1959 அன்று வெளியானது.[2] இது இந்தியில் கான்தான் (1965), தெலுங்கில் கலசி உண்டே கலடு சுகம் (1961), கன்னடத்தில் முறியாத மனே (1964), மலையாளத்தில் நிறைகுடம் (1977) ஆகிய பெயர்களில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

பாகப்பிரிவினை
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
கதைகதை சோலமலை
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
எம். ஆர். ராதா
எம். என். நம்பியார்
டி. எஸ். பாலையா
எஸ். வி. சுப்பைய்யா
பி. சரோஜாதேவி
தாம்பரம் லலிதா
எம். வி. ராஜம்மா
சி. கே. சரஸ்வதி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஅக்டோபர் 31, 1959
ஓட்டம்.
நீளம்16729 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

வைத்தியலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோர் சகோதரர்கள். அவர்கள் முறையே அகிலாண்டம், மீனாட்சியை மணந்துள்ளனர். வைத்தியலிங்கத்திற்குக் குழந்தைகள் இல்லை ஆனால் சுந்தரலிங்கத்திற்கு கண்ணையன் மணி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். கன்னையனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தால் இடது கை செயலிழந்து போகிறது. அவர் படிப்பறிவற்றவராகவும் உள்ளார். மணி ஆரோக்கியமானவராகவும், நன்கு படித்தவராகவும், சுந்தரலிங்கத்தின் குடும்பத்தில் உள்ளவர்களை வெறுக்கும் அகிலாண்டத்தின் செல்ல மகனாக மாறுகிறார்.

சூழ்ச்சியும், பண ஆசையும் உள்ள அகிலாண்டத்தின் சகோதரன் சிங்கப்பூர் சிங்காரம் சகோதர்களின் குடும்பத்துக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுதி பாகப் பிரிவினை செய்யவைக்கிறார். அதே நேரத்தில் மணி சிங்காரத்தின் மகள் அமுதாவை மணந்ததால் கண்ணையனும் மணியும் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுகிறது. கண்ணையன் பொன்னியை மணக்கிறார். சிங்காரம் அகிலாண்டத்தின் பணம் அனைத்தையும் மோசடி செய்து, நிறுவனத்தின் பணத்தை திருடி மணியை நிறுவனத்தில் சிக்க வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் கண்ணையனுக்கு, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, செயலிழந்த அவரது கை கணமாகிறது. கண்ணையன் சிங்காரத்தின் சதியை முறியடித்து, குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்க்கிறார்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இப்படத்தை கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜி. என். வேலுமணி தயாரித்தார், அவர் ஒரு தமிழ் தயாரிப்பாளராக உயரும் முன் ஆடை தயாரிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். படத்தின் படப்பிடிப்பு அடையாறில் உள்ள நெப்டியூன் ஸ்டுடியோவில் (பின்னர் சத்யா ஸ்டுடியோ) நடைபெற்றது. ஜி. விட்டல் ராவ் ஒளிப்பதிவு மேற்கொண்டார். பீம் சிங் தானே படத்தைத் தொகுப்பையும் மேற்கொண்டார். ஹரி பாபுவும் கஜபதியும் ஒப்பனையாளர்களாக இருந்தனர். இசையமைப்பாளர் ஜி. எஸ். மணி உதவி இசையப்பாளாரக இருந்தார். மாதவன், சின்னிலால், சம்பத் ஆகியோர் நடனம் அமைத்தனர்.[4] கோபிசெட்டிபாளையத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் இது ஆகும்.[5]

இசை தொகு

இப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர்.[6] பாடல் வரிகள் கண்ணதாசன், அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் எழுதினர். "தாழையாம் பூ முடிச்சி" பாடலுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி மூன்று இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தினார்.[7][8] படத்தில் ஒரு தாலாட்டு பாடலை (ஏன் பிறந்தாய் மகனே) எழுத, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை எழுத முதலில் அணுகியபோது; தாலாட்டுக்கு பாடல் எழுதுவது தனக்கு வசதியாக இல்லாததால், பாடல் வரிகளை கண்ணதாசனைக் கொண்டு எழுதுமாறு தயாரிப்பாளரை வலியுறுத்தினார். நானே ராஜாவுக்குப் பிறகு சிவாஜி கணேசனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் மனத்தாபம் இருந்ததால் இருவரும் தொழில் ரீதியாக விலகி இருந்தனர். கண்ணதாசனைக் கொண்டு பாடல் எழுத வைக்கலாமா என்று தயாரிப்பாளர் கணேசனிடம் கேட்டபோது, அவர் அதற்கு ஒப்புக்கொண்டார்.[9]

பாடல் பாடகர் வரிகள் நீளம் (நி:நொ)
"ஆனை முகத்தானே...பிள்ளையாரு கோயிலுக்கு" டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 04:24
"ஆட்டத்திலே பலவகை உண்டு" ஏ. எல். ராகவன், கே. ஜமுனா ராணி 03:18
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே" சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈசுவரி அ. மருதகாசி 03:35
"பாலூற்றி உழவு...தேரோடும் இந்த சீரான" டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா கண்ணதாசன் 06:52
"தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்" பி. சுசீலா 03:31
"தாழையாம் பூ முடிச்சி" டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா 06:00
"ஏன் பிறந்தாய் மகனே" டி. எம். சௌந்தரராஜன் 03:24

விருதுகள் தொகு

இத்திரைப்படம் 1960இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது (குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்) பெற்றது[10].

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (31 சனவரி 2015). "Bhagapirivinai 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-bhagapirivinai-1959/article6842599.ece. பார்த்த நாள்: 5 அக்டோபர் 2016. 
  2. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்" (in ta) இம் மூலத்தில் இருந்து 14 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160814054109/http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji-2.asp. 
  3. Jeyaraj, DBS (26 July 2014). "Sivaji Ganesan: Tamil cinema's versatile actor par excellence". Daily FT இம் மூலத்தில் இருந்து 10 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170110082859/http://www.ft.lk/article/328270/Sivaji-Ganesan---Tamil-cinema-s-versatile-actor-par-excellence. 
  4. Randor Guy (31 January 2015). "Bhagapirivinai 1959". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200815202237/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-bhagapirivinai-1959/article6842599.ece. 
  5. "Gobichettipalayam – a 'paradise' for cinema directors". 7 March 2018 இம் மூலத்தில் இருந்து 14 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180714173507/https://timesofindia.indiatimes.com/city/salem/gobichettipalayam-a-paradise-for-cinema-directors/articleshow/63193200.cms. 
  6. "Bhaaga Pirivinai (Original Motion Picture Soundtrack)". 1959-12-01 இம் மூலத்தில் இருந்து 20 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220720110831/https://music.apple.com/in/album/bhaaga-pirivinai-original-motion-picture-soundtrack/1360844590. 
  7. Rajasekaran, Ilangovan. "The legend of music" இம் மூலத்தில் இருந்து 7 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200907114733/https://frontline.thehindu.com/other/obituary/the-legend-of-music/article7443685.ece. 
  8. "திரையும் இசையும்". Kalki. 16 April 1989. pp. 20–22. Retrieved 2 February 2023.
  9. "பாடல் பிறந்த பின்னே". Kalki. 15 June 1980. pp. 43–45. Retrieved 3 April 2023.
  10. "7th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. http://dff.nic.in/2011/7th_nff.pdf. பார்த்த நாள்: 04 September 2011. 

வெளி இணைப்புகள் தொகு