பிரண்ட்லைன்
பிரண்ட்லைன் (Frontline) என்பது இந்தியாவில் சென்னையிலிருந்து வெளி வரும் ஓர் ஆங்கில இதழ். தி இந்து குழுமத்தினரால் 1984 திசம்பர் முதல் இந்த இதழ் பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.[1]
வகை | மாதம் இருமுறை வெளியீடு |
---|---|
உரிமையாளர்(கள்) | தி இந்து குழுமம் |
நிறுவியது | டிசம்பர் 1984 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
விற்பனை | 152,000 |
ISSN | 0970-1710 |
இணையத்தளம் | Frontline.in |
அரசியல், சமூகம், பொருளியல் ஆகிய துறைகள் சார்ந்த சிக்கல்களைப் பற்றி முழுமையான விவரங்களுடன் விரிவாக ஆராய்கின்ற கட்டுரைகள் பிரண்ட்லைன் இதழில் இடம் பெறுகின்றன. சுற்றுச் சூழல், இயற்கை, நாகரிகம், பண்பாடு, திரைப்படம் ஆகியன தொடர்பான கட்டுரைகள் வெளிவருகின்றன.
152000 படிகள் அச்சாகி விற்பனையாகும் இந்த ஆங்கில இதழின் ஆசிரியர் ஆர்.விசயசங்கர் ஆவார்.