வெகுளிப் பெண்
வெகுளிப் பெண் (Vegulipen) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். தேவதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வி. குமார் இசை அமைப்பில், எஸ். எம். அப்துல் ஜாபர் தயாரிப்பில் 2 ஜூலை 1971[1] ஆம் தேதி வெளியானது. சிறந்த தமிழ்ப் படத்திற்கான இந்திய தேசிய விருதைப் பெற்றது.[2]
வெகுளிப் பெண் | |
---|---|
இயக்கம் | எஸ். எஸ். தேவதாஸ் |
தயாரிப்பு | எஸ். எம். அப்துல் காதர் ஜானட் கம்பைன்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெமினி கணேசன் தேவிகா |
வெளியீடு | சூலை 2, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4498 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
ஜெமினி கணேசன், தேவிகா, வெண்ணிறாடை நிர்மலா, ஆர். முத்துராமன், வி. கே. ராமசாமி, நாகேஷ், ராதிகா, சச்சு, எம். சுந்தரி பாய், கே. பாலாஜி, எஸ். வரலக்ஷ்மி, எஸ். ராமா ராவ்.
கதைச்சுருக்கம் தொகு
காவல் ஆய்வாளர் ராமு (ஜெமினி கணேசன்) - ஜானகி (தேவிகா) தம்பதியருக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஜானகியின் வெகுளியான தங்கை ராதா, அவர்களுடன் வாழ்ந்து வருகிறாள். ஜானகி மருத்துவர் எஸ். வி. லட்சுமியுடன் நெருக்கமாக இருந்து வருகிறாள். லட்சுமியின் மகன் மனோகர் (கே. பாலாஜி) ஒரு மனநல மருத்துவர் ஆவார். ராமுவின் சகோதரர் முத்து சென்னைக்கு திரும்புகிறார். ரயில் வண்டியில், பூபதி ராஜாவின் மகள் ராணியை சந்திக்கிறார் முத்து. முத்துவின் வெற்றியை கேள்விப்பட்டு வெகுவாக ஈர்க்கப்படுகிறாள் ராணி.
ராமு தன் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறான். மோகனின் நடவடிகைகைளை பார்த்து, கண்டிக்கிறான் ஜானகி. ஆனாலும் ராதாவை காதலிப்பதாக திட்டவட்டமாக கூறிவிடுகிறான்.
பின்னர், முத்து-ராதா திருமணத்தை நடத்த ராமு-ஜானகி முடிவு செய்கிறார்கள். மாறாக ராதாவிற்கு அதில் ஒப்புதல் இல்லை. அவ்வாறாக ஒருமுறை ராமு ஊரில் இல்லாத பொழுது, பாலில் தூக்க மாத்திரையை கலந்து ராதாவுக்கு கொடுக்கிறான் மோகன். மறுநாள், ராணுவ முகாமிற்கு சென்றுவிடுகிறான். மூன்று மாதங்களுக்கு பிறகு ராதா கர்ப்பமாக இருக்கிறாள் என்பது தெரியவருகிறது ஆனால் அதற்கு காரணம் யார் என்று தெரியவில்லை. இறுதியில் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கண்டிபிடித்தலே மீதிக் கதையாகும்.
தயாரிப்பு தொகு
வெள்ளிக்கிழமை என்ற நாடகத்தைத் தழுவிய வெகுளிப் பெண் திரைப்படத்தை எஸ். எஸ். தேவதாஸ் இயக்கினார்.[3][4]
ஒலிப்பதிவு தொகு
இப்படத்திற்கு, வி. குமார் இசை அமைத்தார்.[5]
வெளி-இணைப்புகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "வெகுளிப்பெண்" இம் மூலத்தில் இருந்து 2018-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180421163254/http://vellitthirai.com/movie/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/.
- ↑ "Ramachandran, T. M., ed. (1978). Film World. 14. pp. cclxxxiv.". https://books.google.co.in/books?id=xXhTAAAAYAAJ&dq=Veguli+Penn&focus=searchwithinvolume&q=Veguli.
- ↑ "https://www.pressreader.com". https://www.pressreader.com/india/the-new-indian-express/20130425/281689727305209.
- ↑ செல்லூலாய்ட் பெண்கள் - Kungumam Tamil Weekly Magazine. http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4523&id1=84&issue=20180201. பார்த்த நாள்: 2022-07-27.
- ↑ "Vegulippenn - All Songs - Download or Listen Free - JioSaavn" (in en-US). 1971-12-31. https://www.jiosaavn.com/album/vegulippenn/fYBo49kEJxU_.