பலே பாண்டியா (1962 திரைப்படம்)
பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பலே பாண்டியா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்[2].
பலே பாண்டியா | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிலிம்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் எம். ஆர். ராதா தேவிகா பாலாஜி சந்தியா வசந்தி எம். ஆர். சந்தானம் |
வெளியீடு | மே 26, 1962[1] |
நீளம் | 4449 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம் தொகு
இளைஞனான பாண்டியன் அண்ணியின் கொடுமை தாளாமல் தற்கொலைக்கு முயல்கிறான். அவனை கபாலி காப்பாற்றுகிறான். இன்சூரன்ஸ் பணத்துக்காக வேண்டி கபாலியும் மருதுவும் சேர்ந்து பாண்டியனை துன்புறுத்துகின்றனர். பாண்டியனைக் கொன்றுவிட்டு இன்சூரன்ஸ் பணத்தை தாங்கள் அடைய முயற்சிக்கின்றனர். அவர்களிடமிருந்து பாண்டியன் தப்பித்து விடுகிறான். பாண்டியனும் பணக்கார வியாபாரி அமிர்தலிங்கத்தின் மகள் கீதாவும் காதலிக்கின்றனர்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Bale Pandiya (1962) - Movie Reviews, Videos, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis on". Popcorn.oneindia.in. 1962-05-26 இம் மூலத்தில் இருந்து 2012-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120407120241/http://popcorn.oneindia.in/title/6615/bale-pandiya-1962.html. பார்த்த நாள்: 2012-03-05.
- ↑ "A doyen among actors". Chennai, India: Hindu.com. 1928-10-01. http://www.hindu.com/fline/fl1816/18161130.htm. பார்த்த நாள்: 2012-03-05.