ஆனந்த ஜோதி

வி. என். ரெட்டி மற்றும் ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1963இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

ஆனந்த ஜோதி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. என். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், தேவிகா, கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நடிகை தேவிகா எம். ஜி.ஆர் உடன் நடித்த ஒரே படம் இதுவாகும்.

ஆனந்த ஜோதி
இயக்கம்வி. என். ரெட்டி,
ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புபி. எஸ். வீரப்பா
(ஹரிஹரன் பிலிம்ஸ்)
கதைஜாவர் சீதாராமன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
தேவிகா
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுஜெ. ஜி. விஜயம்
படத்தொகுப்புசி. பி. ஜம்புலிங்கம்
வெளியீடுசூன் 28, 1963
ஓட்டம்154 நிமிடம்
நீளம்4518 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

பி. எஸ். வீரப்பா இப்படத்தை தயாரித்தார். எம்.ஜி.ஆரும் தேவிகாவும் இணைந்து நடித்த ஒரே படம் இதுவாகும். இப்படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது.[1][2]

எம்.ஜி.ஆர் உடன் கமல்ஹாசன் திரையில் நடித்த ஒரே திரைப்படம் இதுவாகும். பின்னர் 1972 ஆண்டில் எம்.ஜி.ஆர் நடித்த சங்கே முழங்கு மற்றும் நான் ஏன் பிறந்தேன் போன்ற படங்களுக்கு உதவி நடண இயக்குநராக கமல்ஹாசன் பணியாற்றியுள்ளார்.

பாடல்கள்தொகு

ஆனந்த ஜோதி
இசை
வெளியீடு1963
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத் தயாரிப்பாளர்விசுவநாதன்-இராமமூர்த்தி

இப்படத்திற்கு விசுவநாதன்-இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[3] இப்படத்தின் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர் (கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 காலமகள் பி. சுசீலா கண்ணதாசன் 03:32
2 கடவுள் இருக்கின்றான் டி. எம். சௌந்தரராஜன் 04:23
3 நினைக்கத் தெரிந்த பி. சுசீலா 04:24
4 ஒரு தாய் மக்கள் டி. எம். சௌந்தரராஜன் 04:00
5 பல பல டி. எம். சௌந்தரராஜன் 03:06
6 பனியில்லாதா மார்கழியா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:31
7 பொய்யிலே பிறந்து டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:49

மேற்கோள்கள்தொகு

  1. "தேவிகா: 3. நடிப்பு தண்ணீர் பட்ட பாடு..!". தினமணி. 3 செப்டம்பர் 2016. 2021-05-29 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ். Archived from the original on 2021-06-02. https://web.archive.org/web/20210602212324/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963-cinedetails4.asp. பார்த்த நாள்: 2021-05-29. 
  3. "எம்.எஸ். விஸ்வநாதன் (1928– 2015) - மரணமில்லா மகா கலைஞன்". தினமணி. 15 சூலை 2015. https://www.dinamani.com/tamilnadu/2015/jul/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1928%E2%80%93-2015---%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF-1148780.html. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_ஜோதி&oldid=3683327" இருந்து மீள்விக்கப்பட்டது