நவராத்திரி (திரைப்படம்)
ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நவராத்திரி 1964-இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைபடம் ஏ.பி.நாகராஜனால் இயக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன் கதாநாயகனாகவும், சாவித்ரி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இத்திரைபடத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்துள்ளார். 2008 -இல் தசாவதாரம் படம் வருவதற்கு முன்புவரை இதுவே உலக சாதனையாக இருந்தது.
நவராத்திரி | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராசன் |
தயாரிப்பு | ஏ. பி. நாகராஜன் ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சாவித்திரி நாகேஷ் |
வெளியீடு | நவம்பர் 3, 1964 |
நீளம் | 4622 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் சிவாஜி நடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டதாக இப்படத்தை ஏ.பி.நாகராசன் இயக்கியுள்ளார்.
ஆதாரங்கள்
தொகு- நூல்:புகழ் பெற்ற 100 சினிமா கலைஞர்கள், ஆசிரியர்:ஜெகாதா, பதிப்பகம்:சங்கர் பதிப்பகம்.