பானை பிடித்தவள் பாக்கியசாலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பானை பிடித்தவன் பாக்கியசாலி என்பது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் தயாரித்து இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் சாவித்திரி, கே. பாலாஜி, டி. எஸ். துரைராஜ், டி. பி. முத்துலட்சுமி, பி. எஸ். வீரப்பா, வி. எஸ். ராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். இது 10, சனவரி, 1958 அன்று வெளியானது.
பானை பிடித்தவன் பாக்கியசாலி | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | டி. எஸ். துரைராஜ் |
தயாரிப்பு | டி. எஸ். துரைராஜ் மரகதா பிக்சர்ஸ் |
கதை | கதை காங்கேயன் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் எஸ். ராஜேஸ்வரராவ் |
நடிப்பு | பாலாஜி டி. எஸ். துரைராஜ் வீரப்பா ஆர். நாகேஸ்வரராவ் சாய்ராம் சாவித்திரி முத்துலட்சுமி கமலம் அங்கமுத்து |
வெளியீடு | சனவரி 10, 1958 |
நீளம் | 15696 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுதி இந்துவின் தகவல்களைத் தழுவியது:[1]
- டி. எஸ். துரைராஜ்
- சாவித்திரி
- கே. பாலாஜி
- பி. எஸ். வீரப்பா
- வி. எஸ். ராகவன்
- ஆர். நாக்ஸ்வரராவ்
- டி. பி. முத்துலட்சுமி
- சாய்ராம்
- அங்கமுத்து
- டி. என். கமலம்
தயாரிப்பு
தொகுபானை பிடித்தவள் பாக்யசாலி படத்தை மரகத பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் டி. எஸ். துரைராஜ் தயாரித்து இயக்கினார். மேலும் அவர் கதாநாயகனாகவும் நடித்தார்.[2] மூலக் கதையை கங்கேயன் எழுதினார். சென்னையில் இருந்த பாரமவுண்ட், ரேவதி, ஜெமினி, மெஜஸ்டிக் என பல படப்பிடிப்பு வளாகங்களில் படப்பிடிப்பு நடந்தது.[1]
படல்
தொகுஇப்படத்திற்கு எஸ். வி. வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைத்தனர். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், டி. கே. சுந்தர வாத்தியார் தஞ்சை இராமையாதாஸ் ஆகியோரின் பாடல்வரிகள் இடம்பெற்றன. இப்படத்தில் திருச்சி லோகநாதன் படிய "புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே" என்ற பாடல் சமூக ஆர்வலர்களாலும், விமர்சகர்களாலும் அதன் பெண் வெறுப்பு பண்பால் விமர்ச்சிக்கபட்டது.[1]
பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே" | திருச்சி லோகநாதன் | டி. கே. சுந்தர வாத்தியார் | 03:26 |
"மாஞ்சோலை தன்னிலே.... ஆசை முகம் மாறினதோ" | ஜிக்கி | டி. கே. சுந்தர வாத்தியார் | 03:33 |
"சல்ரே சல்ரே கோடா" | டி.எம்.சௌந்தரராஜன் | டி. கே. சுந்தர வாத்தியார் | 02:24 |
"திக்குத் தெரியாத காட்டில்" | ஜிக்கி | மகாகவி சுப்பிரமணிய பாரதியார் | 04:24 |
"பெண்ணே உனதழகைக் கண்டு" | திருச்சி லோகநாதன், ஜிக்கி | மகாகவி சுப்பிரமணிய பாரதியார் | 02:16 |
"கண்ணா, வேடன் எங்கு போனான்" | ஜிக்கி | மகாகவி சுப்பிரமணிய பாரதியார் | 01:12 |
"சோலைக்குள்ளே குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது" | சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா | டி. கே. சுந்தர வாத்தியார் | 03:28 |
"உசாரு உசாரு" | கே. இராணி, ஜி. கஸ்தூரி | டி. கே. சுந்தர வாத்தியார் | 05:58 |
"பச்சடி கேட்டா கிச்சடி சம்பா" | திருச்சி லோகநாதன், டி. வி. இரத்தினம் | தஞ்சை இராமையாதாஸ் | 02:52 |
வரவேற்பு
தொகுபானை பிடித்தவள் பாக்யசாலி 10 சனவரி 1958 அன்று வெளியானது.[2] இந்தியன் எக்சுபிரசு விமர்சனத்தில், "[பானை பிடித்தவள் பாக்யசாலி]யில், நகைச்சுவை நடிகர் துரைராஜ் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும், திறமையான இயக்குனராகவும் உயர்த்திக் கொண்டுள்ளார. மொழிச் சிக்கனம், இயக்கத்தின் சாமர்த்தியம், திறமையாக நெய்யப்பட்ட கதைக்களம், இனிமையான பாடல்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றது. தி இந்து எழுதிய விமர்சனத்தில், "நல்ல நடிப்பு, சிறப்பான நடனம் ஆகியவை உள்ள. சாவித்ரியின், டி. எஸ். துரைராஜ் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளது."[3] வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, படம் "பலவீனமான" திரைக்கதை மற்றும் திரை விவரிப்பில் வெற்றிபெறவில்லை, ஆனால் இசை அதை "மீட்கும் அம்சமாக" இருந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Randor Guy (9 February 2013). "Paanai Pidithaval Bhaagyasaali 1958". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170509131626/http://www.thehindu.com/features/cinema/paanai-pidithaval-bhaagyasaali-1958/article4396960.ece.
- ↑ "1958 – பானை பிடித்தவள் பாக்கியசாலி – மரகதா பிக்" [1958 – Paanai Pidithaval Bhaagyasaali – Marakatha Pic.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 9 May 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "The press acclaim and the public applaud". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 24 January 1958. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19580124&printsec=frontpage&hl=en.