எஸ். ராஜேஸ்வர ராவ்

(எஸ். ராஜேஸ்வரராவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எஸ். ராஜேஸ்வர ராவ் (தெலுங்கு: సాలూరు రాజేశ్వరరావు) (11 அக்டோபர் 1922 – 25 அக்டோபர் 1999) ஒரு இந்திய இசையமைப்பாளர், பல்வாத்தியக் கலைஞர், இசை நடத்துநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர், இசை வித்துவான் என பல துறை வல்லவர் ஆவார். பெரும்பாலும் தென்னிந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1][2] அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் தமிழ், தெலுங்கு படவுலகுகளில் குறிப்பிடத்தக்க இசைப்பணி ஆற்றியுள்ளார். [3][4]

எஸ். ராஜேஸ்வர ராவ்
பிற பெயர்கள்சலூர் ராஜேஸ்வர ராவ்
பிறப்பு11 அக்டோபர் 1922
பிறப்பிடம்சிவராமபுரம், விஜயநகரம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு26 அக்டோபர் 1999(1999-10-26) (அகவை 77)
இசை வடிவங்கள்இந்திய திரையிசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்
தபேலா
டோலக்
மிருதங்கம்
புல்லாங்குழல்
கிட்டார்
பியானோ
வயலின்
இசைத்துறையில்1934–1986
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
ஆர்மோனியம்

இசையமைத்த தமிழ் திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்பு
1942 நந்தனார் எம். டி. பார்த்தசாரதியுடன் இணைந்து
1943 தாசிப்பெண்
1947 மிஸ் மாலினி பரூர் எஸ். அனந்தராமனுடன் இணைந்து
1948 சந்திரலேகா
1949 அபூர்வ சகோதரர்கள்
1953 மனம்போல் மாங்கல்யம்
1953 பூங்கோதை
1954 ஆண்டி பெற்ற செல்வம்
1954 விப்ரநாராயணா
1954 குடும்பம்
1955 மிஸ்ஸியம்மா
1956 பிரேம பாசம்
1956 மாதர் குல மாணிக்கம்
1957 அலாவுதீனும் அற்புத விளக்கும்
1957 இரு சகோதரிகள்
1957 மாயா பஜார் கண்டசாலாவுடன் இணைந்து
1958 செஞ்சுலட்சுமி
1958 கடன் வாங்கி கல்யாணம்
1959 அவள் யார்
1959 மஞ்சள் மகிமை
1960 பெற்ற மனம்
1962 விக்ரமாதித்தன்

பெற்ற விருதுகளும், சிறப்புகளும் தொகு

  • ஆந்திரா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது
  • திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்துவானாக நியமனம் பெற்றார்
  • தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் கலைமாமணி விருது
  • தெலுங்கு திரையுலகுக்கு ஆற்றிய சேவைகளுக்காக 1992 ஆம் ஆண்டு ரகுபதி வெங்கையா விருது[5]
  • 1980 ஆம் ஆண்டு ஸ்ரீ வாசவி கன்யக பரமேஸ்வரி மகாத்மியம் திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக நந்தி விருது.

References தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜேஸ்வர_ராவ்&oldid=3574999" இருந்து மீள்விக்கப்பட்டது