தேவதாஸ் (1953 திரைப்படம்)
தேவதாஸ் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும். தமிழில் தேவதாஸ் எனவும் தெலுங்கில் தேவதாசு எனும் பெயரிலும் வெளிவந்தது. இப்படம் சரத்சந்திர சட்டோபாத்யாயா 1917இல் எழுதிய தேவதாஸ் என்ற புதினத்தின் அடிப்படையில் இது படமாக்கப்பட்டது. சாரங்கபாணி திரைக்கதை எழுத, வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், எம். என். நம்பியார், சாவித்திரி[1] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படத்திற்கு சி. ஆர். சுப்பராமன் இசையமைக்க, பி. வி. நாராயணன் படத்தொகுப்பு செய்தார். பி. எஸ். ரங்கா ஒளிப்பதிவு செய்தார்.
தேவதாஸ் | |
---|---|
இயக்கம் | வேதாந்தம் ராமைய்யா |
தயாரிப்பு | வினோதா பிக்சர்ஸ் |
கதை | சரத் சந்திரசாட்டெர்ஜி |
இசை | சி. ஆர். சுப்பராமன் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் எஸ். வி. ரங்கராவ் சாவித்திரி லலிதா சச்சு |
வெளியீடு | செப்டம்பர் 11, 1953 |
நீளம் | 17260 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
இப்படம் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் தயாரிக்கபட்டது. இரண்டிலும் சில நடிகர்கள் மாறுபட்டனர். இரண்டு பதிப்புகளிலும் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி, லலிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்; துணை வேடங்களில் எஸ். வி. ரங்கராவ், சி. எஸ். ஆர். ஆஞ்சநேயுலு, துரைசாமி, சுரபி கமலாபாய் ஆகியோர் நடித்தனர்.
இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் 26 சூன் 1953 அன்றும், பின்னர் 3 மாதம் கழித்து தமிழ் மொழியில் 11 செப்டம்பர் 1953 அன்றும் வெளியானது. இரண்டு பதிப்புகளும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. திரைப்படத்தின் சொற்றொடர்கள் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டு, அது வழிபாட்டு நிலையை அடைந்தது. இரண்டு பதிப்புகளும் சாவித்ரி மற்றும் நாகேஸ்வர ராவ் என இருவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின.
நடிகர்கள்
தொகு- ஏ. நாகேஸ்வர ராவ் - தேவதாஸ்
- சாவித்திரி - பார்வதி
- சச்சு - சிறுவயது பார்வதி
- லலிதா - சந்திரமுகி
- எஸ். வி. ரங்கராவ்
- எம். என். நம்பியார்
பாடல்கள்
தொகுஇப்படத்திற்கு சி. ஆர். சுப்பராமன் இசையமைத்தார். பாடல் வரிகளை தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு முறையே சமுத்ராலா ராகவாச்சார்யா மற்றும் உடுமலை நாராயணகவி மற்றும் கே. டி. சந்தானம் ஆகியோர் எழுதினர்.
தமிழ்ப் பதிப்பு பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "சந்தோஷம் வேணுமென்றால்" | ஆர். பாலசரஸ்வதி | 03:17 | |||||||
2. | "எல்லாம் மாயை" | கே. இராணி | 03:02 | |||||||
3. | "உறவும் இல்லை" | கண்டசாலா, கே. இராணி | 04:15 | |||||||
4. | "உலகே மாயம்" | கண்டசாலா | 03:17 | |||||||
5. | "ஓ தேவதாஸ்" | கே. ஜமுனா ராணி, உடுதா சரோஜினி | 02:51 | |||||||
6. | "பாராமுகம் ஏனைய்யா" | ஆர். பாலசரஸ்வதி | 03:32 | |||||||
7. | "துணிந்த பின் மனமே" | கண்டசாலா | 03:08 | |||||||
8. | "ஓ தேவதாஸ்" | கண்டசாலா, ஜிக்கி | 02:51 | |||||||
9. | "சந்தோஷம் தரும்" | கண்டசாலா | 02:27 | |||||||
10. | "அன்பே பாவமா" | ஆர். பாலசரஸ்வதி | 03:16 | |||||||
11. | "கனவிததான்" | கண்டசாலா | 03:08 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ "'உலகே மாயம் வாழ்வே மாயம்', 'துணிந்தபின் மனமே..' தோற்ற காதலை சொல்லி ஜெயித்த 'தேவதாஸ்' - 67 ஆண்டுகளாகியும் மறக்கவே முடியாத காதல் காவியம்". இந்து தமிழ். 11 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- திருப்புமுனை திரைப்படங்கள் பரணிடப்பட்டது 2017-12-07 at the வந்தவழி இயந்திரம்