கே. டி. சந்தானம்
கே. டி. சந்தானம் (K. D. Santhanam) ஒரு இந்திய தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், கதை வசனகர்த்தாவும், பாடலாசிரியருமாவார்.[1][2]
கே. டி. சந்தானம் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர், கதை வசனகர்த்தா மற்றும் திரைப்பட பாடலாசிரியர் |
தொழில் வாழ்க்கை தொகு
இவர் மதுரையில் இயங்கி வந்த ஸ்ரீ மங்கள பால கான சபாவில் ஆசிரியராகப் பணியாற்றி இளம் பையன்களுக்கு நாடகத்துறைப் பயிற்சி அளித்து வந்தார். இவர் ஒரு கண்டிப்பான ஆசிரியர். தவறிழைக்கும் பையன்களை பிரம்பால் ஓட ஓட விரட்டி அடிப்பார். இவரால் பயிற்றுவிக்கப்பட்ட சிவாஜி கணேசன் பின்நாளில் உலகப் புகழ் நடிகரானார். தனது முன்னேற்றத்துக்கு சந்தானம் கொடுத்த பயிற்சியே காரணம் என சிவாஜி கணேசன் கூறியதாக ஆரூர்தாஸ் அவரது சுயசரித நூலில் எழுதியுள்ளார்.
நடிகராக தொகு
ஒரு குணச்சித்திர நடிகராக அவர் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பாசமலர் படத்தில் சிவாஜி கணேசனுக்கும் எம். என். ராஜத்துக்கும் திருமணம் ஏற்பாடு செய்யும் ஊர்ப் பெரியவர் இராஜரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆஹா என்ன பொருத்தம் என்ற ரகசிய போலீஸ் 115 என்ற திரைப்படப் பாடலில் இடையிடையே "அங்கே என்ன சத்தம்?" என்ற ஒரு அதிகாரக் குரல் கேட்கும். அது சந்தானத்தின் குரலே. இந்தப் படத்தில் அவர் நீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெயலலிதாவின் தந்தை திரைப்படத் தயாரிப்பாளர் தனபால் முதலியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆசை முகம் என்ற படத்தில் எம். ஜி. ஆரின் தந்தையாக நடித்தார்.
பாடலாசிரியராக தொகு
1950 களில் தமிழ்த் திரையுலகில் பல துறைசார் நிபுணத்துவம் பெற்ற பாடலாசிரியர்கள் இருந்தார்கள். உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் இடதுசாரி மற்றும் திராவிட இயக்க தொடர்பான பாடல்களை எழுதினார்கள். அ. மருதகாசி விவசாயத்துடன் தொடர்புடைய பாடல்களை எழுதினார். கு. மா. பாலசுப்பிரமணியம் இனிமையான பாடல்களை இயற்றினார். கண்ணதாசன் வாழ்க்கை, தத்துவம் தொடர்பான பாடல்களை எழுதினார். தஞ்சை ராமையாதாஸ் சாதாரண மக்களுக்குப் பிடித்த ஜனரஞ்சகமான பாடல்களை எழுதினார். இந்நிலையில் சந்தானம் சந்தக்கவி எனச் சொல்லப்படும் தாளக்கட்டுடன் கூடிய பாடல்களை இயற்றி தன் முத்திரை பதித்தார்.
அவரது சந்தக் கவிகளில் குறிப்பிடத்தக்க ஒரு பாடல் 1957இல் வெளியான அம்பிகாபதி திரைப்படத்தில் இடம்பெற்ற தமிழ் மாலை தனைச் சூடுவாள் என்ற பாடலாகும். கதையின்படி அம்பிகாபதி 100 பாடல்கள் பாட வேண்டும். இந்தக் காட்சிக்காக சந்தானம் ஐந்து பாடல்கள் எழுதினார். இவற்றை வைத்து நூறு பாடல்களைப் பாடுவதாக காட்சி அமைப்பு செய்யப்பட்டது. இந்த முறையில் ஐந்தாவது பாடல் 99 ஆவது பாடலாக அமைந்தது. பாடும் புலவன் உணர்ச்சி வசப் படுகிறான். கடைசிப் பாடலின் இறுதி ஐந்து வரிகளை ஒரே மூச்சில் பாடுகிறான். இந்த ஐந்து வரிகளின் சொற்பிரவாகம் கேட்பவர்களை மெய்ம்மறக்கச் செய்தது. இந்தப் பாடல் சந்தானத்தின் முத்திரைப் பாடல் என்று சொல்லப்படுகிறது.
மெல்லத் திறந்தது கதவு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வா வெண்ணிலா என்ற தனது பாடலுக்கு சந்தானம் சண்டிராணி (1953) படத்திற்காக இயற்றிய வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே... என்ற பாடல் தான் உத்வேகம் கொடுத்ததாக இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார்.
1950 ஆம் ஆண்டில் வெளியான விஜயகுமாரி என்ற திரைப்படத்தில் சந்தானம் எழுதிய லாலு லாலு என்ற நடனப் பாடலை வைஜயந்திமாலா பாடியிருக்கிறார். அக்காலத்தில் இப்பாடல் பிரபலமானது.[3]
குறிப்பிடத்தக்க பல பாடல்களை சந்தானம் இயற்றியுள்ளார்.
திரைப்பங்களிப்பு தொகு
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும். நடிகர், பாடலாசிரியர்
ஆண்டு | திரைப்படம் | பாடலாசிரியர் | நடிகர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1948 | வேதாள உலகம் | |||
1950 | பாரிஜாதம் | |||
1950 | விஜயகுமாரி | |||
1951 | கைதி | |||
1951 | மோகனசுந்தரம் | |||
1951 | சுதர்சன் | |||
1952 | சின்னதுரை | |||
1952 | காதல் | |||
1952 | வேலைக்காரன் | |||
1953 | அழகி | |||
1953 | சண்டிராணி | |||
1953 | தேவதாஸ் | |||
1953 | மருமகள் | |||
1954 | கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி | |||
1955 | கோமதியின் காதலன் | சின்னவேலி ஜமீன்தாராக | ||
1955 | மேனகா | |||
1955 | முதல் தேதி | |||
1957 | அம்பிகாபதி | சடையப்ப வள்ளலாக | ||
1957 | சக்கரவர்த்தி திருமகள் | |||
1957 | மணமகன் தேவை | |||
1958 | பதி பக்தி | நல்லசிவம் பிள்ளையாக | ||
1958 | எங்கள் குடும்பம் பெரிசு | |||
1959 | தாய் மகளுக்குக் கட்டிய தாலி | |||
1960 | ஆடவந்த தெய்வம் | சிங்காரம் பிள்ளையாக | ||
1960 | ஆளுக்கொரு வீடு | |||
1960 | கடவுளின் குழந்தை | |||
1960 | கைராசி | |||
1960 | கவலை இல்லாத மனிதன் | பரமசிவமாக | ||
1960 | விஜயபுரி வீரன் | |||
1961 | குமார ராஜா | |||
1961 | நல்லவன் வாழ்வான் | |||
1961 | பாலும் பழமும் | பரமசிவமாக | ||
1961 | பாசமலர் | பரமசிவமாக | ||
1962 | ஆடிப்பெருக்கு | வெளியீட்டாளராக | ||
1962 | செந்தாமரை | |||
1963 | ஏழை பங்காளன் | |||
1963 | காஞ்சித் தலைவன் | |||
1964 | பாசமும் நேசமும் | |||
1965 | ஆசை முகம் | சிவசங்கரன் பிள்ளையாக | ||
1965 | கலங்கரை விளக்கம் | நீலாவின் தந்தையாக | ||
1968 | பூவும் பொட்டும் | |||
1968 | ரகசிய போலீஸ் 115 | தனபால் முதலியாராக | ||
1969 | அக்கா தங்கை | நீதிபதியாக கௌரவ வேடத்தில் | ||
1969 | வா ராஜா வா | மூத்த சிற்பி | ||
1970 | திருமலை தென்குமரி | தமிழ்ப் பேராசிரியர் சொக்கலிங்கம் | ||
1971 | கண்காட்சி | |||
1971 | குலமா குணமா | |||
1972 | அகத்தியர் | |||
1972 | சங்கே முழங்கு | கடைசிக் காட்சியில் நீதிபதியாக | ||
1973 | காரைக்கால் அம்மையார் | பணக்கார தொழு நோயாளி | ||
1973 | ராஜராஜ சோழன் | பிரதான சிற்பி | ||
1973 | திருமலை தெய்வம் | |||
1977 | ஸ்ரீ கிருஷ்ணா லீலா |
கதை வசனகர்த்தா தொகு
மேற்கோள்கள் தொகு
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.
- கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.
- கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016.
- ↑ ராண்டார் கை (9 ஜூன் 2012). "Vazhkai 1949" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2014-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140827042951/http://www.thehindu.com/features/cinema/vazhkai-1949/article3509383.ece. பார்த்த நாள்: 14 டிசம்பர் 2017.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 321, 346 & 367. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf.
- ↑ ராண்டார் கை (5 நவம்பர் 2009). "Blast from the past: Vijayakumari (1950)" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170328022057/http://www.thehindu.com/features/cinema/Blast-from-the-past-Vijayakumari-1950/article16890418.ece. பார்த்த நாள்: 15 டிசம்பர் 2017.
- ↑ ராண்டார் கை (23 அக்டோபர் 2011). "Chinnadurai 1955" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2016-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161028053722/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/chinnadurai-1955/article2563344.ece. பார்த்த நாள்: 14 டிசம்பர் 2017.
உசாத்துணை தொகு
- Krish. "கொஞ்சம் அரட்டை கொஞ்சம் ஷேரிங்" இம் மூலத்தில் இருந்து 2017-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171214124711/http://krishronline.blogspot.in/2016/08/blog-post.html. பார்த்த நாள்: 14 டிசம்பர் 2017.