சமுத்ராலா ராகவாச்சார்யா
இந்திய திரைக்கதை எழுத்தாளர்
சமுத்ராலா வெங்கட ராகவாச்சார்யலு (Samudrala Raghavacharya) (19 ஜூலை 1902 - 16 மார்ச் 1968), மூத்த சமுத்ரா என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட திரைக்கதை எழுத்தாளரும், உரையாடல் எழுத்தாளரும், பாடலாசிரியரும், பின்னணி பாடகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத் துறையில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[1][2] சமுத்ராலா 1937இல் திரையுகில் அறிமுகமானார். மேலும் கண்டசாலாவுடன் இணைந்து பணியாற்றியதற்காக அறியப்பட்டார்.[3][4]
சமுத்ராலா ராகவாச்சார்யா | |
---|---|
பிறப்பு | சமுத்ராலா வெங்கட ராகவாச்சார்யலு 19 ஜூலை 1902 ரேபள்ளே, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 16 மார்ச் 1968 |
பணி | திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1937–1968 |
பிள்ளைகள் | சமுத்ராலா ராமானுஜாச்சார்யா (மகன்) |
சொந்த வாழ்க்கை
தொகுசமுத்ராலா ராகவாச்சார்யா, 1902ஆம் ஆண்டில் ஆந்திராவின் ரேபள்ளே வட்டத்திலுள்ள பெத்தபுலிவாரு என்ற ஊரில் பிறந்தார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rajadhyaksha, Ashish; Willemen, Paul (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Routledge. p. 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135943189.
- ↑ 2.0 2.1 Krishnamoorthy, Suresh (14 January 2015). "50 years on, Pandava Vanavaasam is still appealing". The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/50-years-on-pandava-vanavaasam-is-still-appealing/article6787110.ece.
- ↑ "Ghantasala Venkateswara Rao".
- ↑ Narasimham, M. L. (11 September 2014). "SANTHOSHAM (1955)". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/santhosham-1955/article6401521.ece.