ரேபள்ளே

ஆந்திர நகரம்

ரேபள்ளே (Repalle) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள 12 நகராட்சிகளில் ஒன்றாகும். இந்த தெனாலி வருவாய் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் ரெபள்ளி மண்டலத்தின் தலைமையகம் ஆகும்.[1][2] இது மாநிலத்தின் கடலோர ஆந்திர பிராந்தியத்தில் கிருஷ்ணா நதிக்கு அருகில் அமைந்துள்ளது.[3]

பெயரின் தோற்றம்தொகு

ரெபள்ளி என்ற பெயர் இரண்டு சொற்களிலிருந்து உருவாகிறது. ரேவு நதி அல்லது ஆற்றங் கரை என்றும், பள்ளே என்பது கிராமம் என்றும் பொருள்படும். முதலில் ரேவப்பல்லே என்று அழைக்கப்பட்ட இந்த பெயர் காலப் போக்கில் ரெபள்ளி என மாற்றமடைந்துள்ளது. [சான்று தேவை]

புவியியல்தொகு

ரெபள்றளி 16.01 ° வடக்கு 80.51 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[4] இந்த நகரம் சராசரியாக 7 மீ (23 அடி) உயரத்தில் உள்ளது.[5] தெனாலி , குண்டூர் மாவட்டத்தில் பாபட்லா மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் மச்சிலிபட்னம் என்பன இந் நகரிற்கு அருகிலுள்ள கிராமங்கள் ஆகும்.

காலநிலை

ரெபள்ளி நகரம் கடற்கரையில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் பொதுவாக கோடையில் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். கோடையில் சராசரி வெப்பநிலை 28 - 42 பாகை செல்சியஸ் வரையில் இருக்கும். குளிர்காலம் சராசரியாக 15 முதல் 30 செல்சியஸ் வெப்பநிலை வரை இருக்கும். பருவமழை காலத்தில் சூலை முதல் நவம்பர் வரை பலத்த மழை பெய்யும்.

புள்ளிவிபரங்கள்தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி, ரெபள்ளி நகரின் மக்கட் தொகை 50,866 ஆகும். மொத்த மக்கட் தொகையில் 24,385 ஆண்களும், 26,481 பெண்களும் உள்ளனர். 1000 ஆண்களுக்கு 1086 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகின்றது. மக்கட் தொகையில் 4,308 பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்களில் 2,184 ஆண் குழந்தைகளும், 2,124 பெண் குழந்தைகளும் ஆவார்கள். ரெபள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 81.32% வீதமாகும். 37,862 கல்வியாளர்கள் உள்ளனர். இது மாநில சராசரியான 67.41% ஐ விட கணிசமாக அதிகமாகும்.[6]

நிர்வாகம்தொகு

ரிபள்ளி நகராட்சி என்பது இரண்டாம் வகுப்பு நகராட்சியாகும். இது 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது 10.97 கிமீ 2 (4.24 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. இது 28 வார்டுகளைக் கொண்டுள்ளது. நகரின் தற்போதைய நகராட்சி ஆணையர் டி.ஸ்ரீனிவாச ராவ் ஆவார்.[7] நகராட்சித் துறையானது பொது குழாய்கள், பொது துளை கிணறுகள், வடிகால்கள், சாலைகள், தெரு விளக்குகள், பொது பூங்காக்கள் போன்ற வசதிகளைப் பராமரிக்கிறது. மேலும் மருந்தகங்கள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் போன்றவைகளையும் பேணுகின்றது.[5]

போக்குவரத்துதொகு

இந்த நகரத்தின் மொத்த சாலை நீளம் 115.10 கிமீ (71.52 மைல்) ஆகும்.[8] ரிபள்ளி பேருந்து நிலையம் ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமானது. அதனால் இயக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் பேருந்து கொட்டகை பொருத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 216 ரிபள்ளிக்கு அருகிலுள்ள பெனுமுடி கிராமத்தின் வழியாக செல்கிறது. இது திகமரு மற்றும் ஓங்கோல் ஆகியவற்றை இணைக்கிறது.[9]  

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேபள்ளே&oldid=2868395" இருந்து மீள்விக்கப்பட்டது