பெத்தபுலிவாரு
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமம்
பெத்தபுலிவாரு (Pedapulivarru) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராம ஊராட்சியாகும்.[1] இது தெனாலி வருவாய் கோட்டத்தின் பட்டிபிரோலு மண்டலத்தில் அமைந்துள்ளது.[6]
பெத்தலங்கா | |
---|---|
ஆள்கூறுகள்: 16°01′12″N 80°51′00″E / 16.0200°N 80.8500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
வட்டம் | பட்டிபிரோலு மண்டலம் |
அரசு | |
• வகை | ஊராட்சி மன்றம் |
• நிர்வாகம் | பெத்தபுலிவாரு கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,562 ha (3,860 acres) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 5,578 |
• அடர்த்தி | 360/km2 (920/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522257 |
இடக் குறியீடு | +91–8648 |
வாகனப் பதிவு | ஏபி |
நிலவியல்
தொகுபெத்தபுலிவாரு மண்டல் தலைமையகமான பட்டிபிரோலுவின்[7]16°01′12″N 80°51′00″E / 16.0200°N 80.8500°E கிழக்கே 1,562 ஹெக்டேர் (3,860 ஏக்கர்) பரப்பளவில் உள்ளது.[3]
பொருளாதாரம்
தொகுகிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம். மேலும், நெல், வாழை மஞ்சள் போன்ற பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.[8] [9]
கல்வி
தொகு2018-19 கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 7 மாவட்ட / மண்டலப் பள்ளிகள் உள்ளன. [10]
ஊரின் முக்கிய பிரபலங்கள்
தொகு- சமுத்ராலா ராகவாச்சார்யா (மூத்த சமுத்ராலா) - இந்திய திரைப்பட திரைக்கதை எழுத்தாளரும், உரையாடல் எழுத்தாளரும், பாடலாசிரியரும், பின்னணி பாடகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.[11]
- கே. விஸ்வநாத் - புகழ்பெற்ற இயக்குநர். தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் இருக்கிறார். இவருடைய குழந்தைப் பருவம் இந்தக் கிராமத்தில் கழிந்தது. இவர் தனது ஆரம்பக் கல்வியை இங்கே பெற்றார்.
- கண்டசாலா - (கந்தாசல வெங்கடேஸ்வர ராவ்) தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த ஊரில் சில காலம் வசித்து வந்தார். இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இவர் 15 ஆண்டுகள் பூசாரியாக இருந்தார்.
- இளைய சமுத்ராலா - தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றும் திரைக்கதை எழுத்தாளரும் தெலுங்குத் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட பாடலாசிரியரும் ஆவார்.[12] இவர் மூத்த திரைக்கதை எழுத்தாளர் மூத்த சமுத்ராலாவின் மகனாவார்.[13][14]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 98. Archived from the original (PDF) on 18 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ "Declaration of A.P. Capital Region – Amendment" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 22 செப்டெம்பர் 2015. p. 7. Archived (PDF) from the original on 6 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
- ↑ 3.0 3.1 "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 474. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ Seetharam, Mukkavilli (1990-01-01). Citizen Participation in Rural Development (in ஆங்கிலம்). Mittal Publications. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170992271.
- ↑ "Declaration of A.P. Capital Region – Amendment" (PDF).
- ↑ "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 782–783. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019.
- ↑ "Helen causes extensive damage to crops". The New Indian Express (Vijayawada). 25 November 2013. http://www.newindianexpress.com/states/andhra_pradesh/Helen-causes-extensive-damage-to-crops/2013/11/25/article1909627.ece. பார்த்த நாள்: 26 February 2016.
- ↑ "Banks embarrass farmers who availed of loans". The hindu (Pedapulivarru (Guntur district)). 8 June 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/banks-embarrass-farmers-who-availed-of-loans/article2086079.ece. பார்த்த நாள்: 8 March 2016.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "మొదటి సినిమా-కె. విశ్వనాథ్, నవతరంగంలో". Archived from the original on 2015-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-08-22.
- ↑ "Smudrala Jr". Eenadu. 2009. Archived from the original on 2009-12-28. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ "Samudrala Jr".
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (10 July 2014). "Encyclopedia of Indian Cinema". Routledge – via Google Books.