பார்த்தால் பசி தீரும்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பார்த்தால் பசி தீரும் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பார்த்தால் பசி தீரும்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புசி. ஆர். பாசவராஜ்

ஜி. கே. புரொடக்ஷன்ஸ்
கதைஏ. சி. திருலோகச்சந்தர்
திரைக்கதைஏ. பீம்சிங்
வசனம்அரூர் தாஸ்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்,
ஜெமினி கணேசன்,
பி. சரோஜாதேவி,
சாவித்திரி,
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுஜி. விட்டல் ராவ்
படத்தொகுப்புஏ. பீம்சிங்,
ஏ. பால் துரைசிங்கம்,
ஆர். திருமலை
கலையகம்ஜி. கே. புரொடக்ஷன்ஸ்
விநியோகம்ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
வெளியீடுசனவரி 14, 1962
நீளம்4605 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு
நடிகர் கதாபாத்திரம்
சிவாஜி கணேசன் பாலு
சாவித்திரி இந்திரா
ஜெமினி கணேசன் வேலு
பி. சரோஜாதேவி சரோஜா
சௌகார் ஜானகி ஜானகி
கமல்ஹாசன் பாபு & குமார்
கே. ஏ. தங்கவேலு சக்கரபாணி
எம். சரோஜா சந்தானலஷ்மி
சி. கே. சரஸ்வதி அகிலாண்டம்

பாடல்கள்

தொகு
பார்த்தால் பசி தீரும்
வெளியீடு1962
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
இசைத் தயாரிப்பாளர்விஸ்வநாதன்-ராமமூர்த்தி
எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 அன்று ஊமை பெண்ணல்லோ ஏ. எல். ராகவன், பி. சுசீலா கண்ணதாசன் 07:05
2 அன்று ஊமை பெண்ணல்லோ [பெண் குரல்] பி. சுசீலா 03:46
3 கொடி அசைந்ததும் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:30
4 பார்த்தால் பசி தீரும் பி. சுசீலா 03:22
5 பிள்ளைக்கு தந்தை ஒருவன் டி. எம். சௌந்தரராஜன் 03:01
6 உள்ளம் என்பது டி. எம். சௌந்தரராஜன் 03:22
7 யாருக்கு மாப்பிள்ளை பி. சுசீலா 03:32

வெளியீடு

தொகு

பார்த்தால் பசி தீரும் திரைப்படம் 1962 ஆண்டு சனவரி 14 தைத் திருநாளில் வெளிவந்தது. மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதுடன் வசூலும் குவித்தது.[1] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவித்ர பிரேமா எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 3, 1962 அன்று ஆந்திரா மாநிலத்தில் வெளியிடப்பட்டது.[2]

சாவித்ரி, சவுகார் ஜானகி, சரோஜாதேவி என மூன்று நாயகிகள் நடித்த இப்படம் சிறு பிரச்சனையை ஏற்படுத்தியது, திரைப்பட ஆரம்ப தலைப்பில் யார் பெயரை முதலில் போடுவது என்று. ஏ.வி.எம். செட்டியார் நூதன முறையில் பெயர் தலைப்பு வெளியிட்டார். 'உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்' என்று எழுதப்பட்ட தலைப்பில் முதலில் சரோஜாதேவி, அடுத்து சிவாஜி, மூன்றாவதாக ஜெமினி, நாலாவதாக சாவித்ரி என புகைப்படங்களைக் காட்டினார்கள். நாயக நாயகியருடன் கே.ஏ. தங்கவேலு, எம். சரோஜா, சவுகார் ஜானகி, சி.கே.சரஸ்வதி மற்றும் இரு வேடங்களில் குட்டி கமலின் தோற்றம் ஆகியனவும் இடம் பெற்றன.

பார்த்தால் பசி தீரும் டைட்டில் தகராறு குறித்து சாவித்ரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், 'நான் தான் சரோஜாதேவியை விட சீனியர். ஆனால் அவர் எனக்கு அடுத்த இடத்தில் தனது பெயரைப் போட்டுக் கொள்ள ஏதாவது மறுப்பு சொல்லியிருப்பார் போலிருக்கிறது. என்னுடைய பெயரைத் தொடர்ந்து சரோஜாதேவியின் பெயர், அப்புறம் சவுகார் ஜானகி அப்படி இருந்திருந்தால் சரி. ஆனால் சிக்கல் அவ்வளவு சுலபமாகத் தீரவில்லை. எங்கள் வீட்டு மஹாலட்சுமி படத்தில் கண்ணாம்பாவின் பெயரைத்தான் முதலில் காட்டினார்கள். அப்போதும் நான் முன்னணி நடிகை. என் பெயரை அடுத்தபடியாகப் போட ஒப்புக் கொண்டேன். பார்த்தால் பசி தீரும் படத்தில் எல்லாருடைய படத்தையும் ஒருங்கே காட்டி சமமான மதிப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டும்தான் அப்படிக் காட்டினார்களாம். வெளியூர்களில் சரோஜாதேவியின் பெயர் மேலே இருந்ததாகக் கேள்விப்பட்டேன். எந்தப் படத்திலும் நடிப்புதான் முக்கியம். பெயர் போட்டுக் கொள்வது, நீ முந்தி நான் முந்தி என்று சண்டை போடுவது எனக்குப் பிடிக்கவில்லை. விவகாரத்தை அப்படியே விட்டு விட்டேன்’ - என்று சாவித்ரி தெரிவித்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "நடிகர் திலகமும் பொங்கல் ரிலீஸ் படங்களும்!". இந்து தமிழ். 16 சனவரி 2019. Archived from the original on 2021-05-27. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2021.
  2. "பவித்ர பிரேமா". ஆந்திரா பத்ரிக்கா: p. 1. 3 மார்ச் 1962 இம் மூலத்தில் இருந்து 2021-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210503054741/https://www.pressacademyarchives.ap.nic.in/newspaperframe.aspx?bookid=28225. 
  3. "சரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே...!". தினமணி. 21 மே 2016. https://www.dinamani.com/junction/kanavukkannigal/2016/may/21/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-5.-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87...-2512590.html. 

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்தால்_பசி_தீரும்&oldid=3959081" இலிருந்து மீள்விக்கப்பட்டது