சிவாஜி புரொடக்சன்சு


சிவாஜி திரைப்பட தயாரிப்பகம் அல்லது சிவாஜி புரொடக்சன்சு ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழ், மற்றும் இந்தி திரைப்படங்களை தயாரித்து வருகிறது.[1] நடிகர் சிவாஜி கணேசன் தொடங்கிய இந்நிறுவனத்தில் தற்போது அவரது மகன்களான 'ராம்குமார் கணேசன்' மற்றும் பிரபு ஆகியோர் நிர்வாகிகளாக உள்ளனர்.[2]

சிவாஜி திரைப்பட தயாரிப்பகம்
Sivaji Productions
வகைதிரைப்படத் தயாரிப்பாளர்
திரைப்பட விநியோகம்
தலைமையகம்சென்னை,  இந்தியா
முக்கிய நபர்கள்ராம்குமார்
பிரபு
தொழில்துறைபொழுதுபோக்கு, மென்பொருள் துறை
உற்பத்திகள்திரைப்படம்
இணையத்தளம்http://www.sivajiproductions.com

தயாரித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் நடிகர்கள் குறிப்புகள்
1958 அமர் தீப் இந்தி டி. பிரகாஷ் ராவ் தேவ் ஆனந்த், வைஜெயந்திமாலா, பத்மினி வீனஸ் பிக்சர்சு உடன் இணைந்து தயாரித்தது.
1962 ராக்கி இந்தி ஏ. பீம்சிங் அசோக் குமார், பிரதீப் குமார் பிரபுராம் பிக்சர்சு உடன் இணைந்து தயாரித்தது
1964 புதிய பறவை தமிழ் தாதா மிராசி
1970 வியட்நாம் வீடு தமிழ் பி. மாதவன் சிவாஜி கணேசன், பத்மினி, நாகேஷ் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
1974 தங்கப் பதக்கம் தமிழ் பி. மாதவன் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா தமிழகம் முழுவதும் 100 நாட்களைக் கடந்தும், சென்னை மற்றும் திருச்சியில் 175 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது.
1977 அண்ணன் ஒரு கோவில் தமிழ் கே. விஜயன் சிவாஜி கணேசன், சுஜாதா, சுமித்ரா

தமிழகத்தின் பல இடங்களில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது

1979 திரிசூலம் தமிழ் கே. விஜயன் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, தேங்காய் சீனிவாசன் சிவாஜி கணேசன் நடித்த 200ஆவது திரைப்படம்
தமிழகம் முழுவதும் 200 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 5 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
1980 ரத்த பாசம் தமிழ் சிவாஜி கணேசன், தேங்காய் சீனிவாசன், மனோரமா
1982 வா கண்ணா வா தமிழ் டி. யோகானந்த் சிவாஜி கணேசன், சுஜாதா, நாகேஷ், ஜெய்கணேஷ் சிவாஜியின் நடிப்பில் 100 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்
1983 சந்திப்பு தமிழ் சி. வி. ராஜேந்திரன் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி, பிரபு திரிசூலம் திரைப்படத்தினை தொடர்ந்து அதிக வசூல் ஈட்டிய வெள்ளி விழா திரைப்படம்.
சென்னை, மற்றும் மதுரையில் 175 நாட்களைக் கடந்தும், தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் 100 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது
1985 நீதியின் நிழல் தமிழ் சந்தான பாரதி-பி. வாசு சிவாஜி கணேசன், பிரபு, கே. ஆர். விஜயா
1986 ஆனந்தக் கண்ணீர் Tamil கே. விஜயன் சிவாஜி கணேசன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், விசு
1986 அறுவடை நாள் தமிழ் ஜி. எம். குமார் பிரபு, பல்லவி
1987 ஆனந்த் தமிழ் சி. வி. ராஜேந்திரன் பிரபு, ராதா, சௌகார் ஜானகி
1989 வெற்றி விழா தமிழ் பிரதாப் கே. போத்தன் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ
1990 மை டியர் மார்த்தாண்டன் தமிழ் பிரதாப் கே. போத்தன் பிரபு, குஷ்பூ
1991 தாலாட்டு கேட்குதம்மா தமிழ் ராஜ் கபூர் பிரபு, கனகா, சில்க் ஸ்மிதா
1992 மன்னன் தமிழ் பி. வாசு ரசினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பூ
1993 கலைஞன் தமிழ் ஜி. பி. விஜய் கமல்ஹாசன், பிந்தியா, சிவரஞ்சனி
1994 ராஜகுமாரன் தமிழ் ஆர். வி. உதயகுமார் பிரபு, நதியா, மீனா பிரபு நடித்த 100ஆவது திரைப்படம்
2005 சந்திரமுகி தமிழ் பி. வாசு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா
2007 டெல்லி ஹைட்ஸ் இந்தி ஆனந்தகுமார் ஜிம்மி செற்கில், நேகா தூபியா, ஓம்புரி
2010 அசல்[3][4] தமிழ் சரண் அஜித் குமார், பிரபு, சமீரா ரெட்டி, பாவனா

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாஜி_புரொடக்சன்சு&oldid=3554348" இருந்து மீள்விக்கப்பட்டது