தேவ் ஆனந்த்

தரம் தேவ் கிஷோரிமல் ஆனந்த் (இந்தி: धर्मदेव आनन्द தேவ் ஆனந்த்; 26 செப்டம்பர் 1923 - 3 டிசம்பர் 2011) ஒரு பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். தேவ் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர் ஆவார். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார் ஆவார்.

தேவ் ஆனந்த்
Dev Anand still2.jpg
இயற் பெயர் தரம் தேவ் கிஷோரிமல் ஆனந்த்
பிறப்பு செப்டம்பர் 26, 1923(1923-09-26)
ஷகர்கர் வட்டம், குர்தாஸ்பூர் மாவட்டம், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 3 திசம்பர் 2011(2011-12-03) (அகவை 88)
இலண்டன்
தொழில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் -
நடிப்புக் காலம் 1946-இன்று வரை

வாழ்க்கை வரலாறுதொகு

ஆரம்பகால வாழ்க்கைதொகு

பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முந்தைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் செல்வவளம் மிக்க வக்கீல் கிஷோரிமல் ஆனந்த் மகனாக தரம் தேவ் குந்தன் லால் கிஷோரிமல் ஆனந்த் பிறந்தார் [1]. லாகூரில்(தற்போது பாகிஸ்தானில்) உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். நடிப்பின் மேல் அவர் கொண்டிருந்த காதல், சொந்த நகரைத் துறந்து இந்தி திரைப்படத்தொழிலின் மையமான மும்பை நோக்கி வரவழைத்தது. தேவ் தனது திரைப்படத்துறை வாழ்க்கையை மும்பை, சர்ச்கேட்டில் உள்ள இராணுவ சென்சர் அலுவலகத்தில் 160 ரூபாய் சம்பளத்தில் தொடங்கினார் .

1946 ஆம் ஆண்டு பிரபாத் டாக்கீஸ் தயாரித்த ஹம் ஏக் ஹே படத்தில் நடிகராகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. புனாவில் படப்பிடிப்பு நடந்த பொழுது சகநடிகர் குருதத் அவருடன் தேவ் நட்பு கொள்ளலானார்.

எனினும் தேவிற்கு ஒரு மிகப்பெரும் திருப்புமுனை அசோக் குமாரால் வழங்கப்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் சுற்றிக் கொண்டிருந்த தேவ் அவர்களை குமாரை பாம்பே டாக்கீஸ் தயாரித்த ஜித்தி(1948) திரைப்படத்தின் கதாநாயகராக ஆக்கி, காமினி கௌஷாலுடன் இணை நடிகராக்கி, இத்திரைப்படத்தை ஒரு வெற்றிப்படமாக்கினார். 1949 ஆம் ஆண்டில் தேவ் ஒரு தயாரிப்பாளராக மாறி சொந்தமாக நவகேதன் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அடுத்தடுத்து திரைப்படங்கள் தயாரிக்கும் பணியை தொடர்ந்து ஆற்றுகிறார்.

அதன் வெற்றியைத் தொடர்ந்து அவர் குரு தத் இயக்குனரோடு பாசி என்ற குற்றத் திகில் திரைப்படத்தை (1951) உருவாக்கினார். இந்த ஆக்கப்பூர்வமான கூட்டணிக்கு அதிர்ஷ்டம் அடித்து வெற்றி கண்டது; மேலும் சாகிர் லுதியானவி பாடலாசிரியரின் தட்பீர் சே பிக்டி ஹுயி தக்தீர் பனா தே..., என்ற பாடல் பிரபலமானது. இப்படம் தேவ் ஒரு உண்மையான நட்சத்திரம் என்பதை எடுத்துக்காட்டுவது போல் அமைந்தது.

இடைப்பட்ட காலம்தொகு

1952 இல் வெளிவந்த ஜால் திரைப்படத்தில் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அவரது திரைப்படங்களான ரஹீ மற்றும் ஆந்தியான் இரண்டும் ராஜ் கப்பூரின் ஆவாரா திரைப்படத்துடன் வெளியிடப்பட்டன. அதே ஆண்டு, டாக்சி டிரைவர் ஒரு மாபெரும் வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டது. இதிலும் தேவின் கதாநாயகியாக கல்பனா கார்திக் இருக்க, இருவரும் அமைதியாக ஆரவாரமில்லாமல் திருமணம் புரிந்து கொள்ள தீர்மானித்தனர்.

திருமணம் மற்றும் 1956ல் மகன் சுனில் பிறந்தது இரண்டும் அவரது தொழில்வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. அதிவேகமாக கனல் கக்கும் முறையில் வசனம் உச்சரிக்கும் முறை, தொப்பிகளின் அணிவகுப்பு, (எடுத்துக்காட்டாக அயே மேரி டோபி பலட் கே ஆ -வில்), மற்றும் பேசும் போது தலையை அசைக்கும் பாங்கு, இவைகள் எல்லாம் முனிம்ஜி , சிஐடி , மற்றும் பேயிங் கெஸ்ட் படங்கள் வாயிலாக தேவின் தனிபாணியாக அமைந்தது. அவரது பாணி இரசிகர்களால் ரசிக்கப்பட்டும், பிறரால் பரவலாக பின்பற்றப்பட்டும் புகழடைந்தது. 1950-களின் எஞ்சிய ஆண்டுகளில், வரிசையாக வெளிவந்த வெற்றிப்படங்களில் அவர் நடித்திருந்தார். 1955ல் இன்சானியத் படத்தில் அவர் திலிப்குமாருடன் இணைந்து நடித்தார்.

இப்படி தனிச்சிறப்பான பாணி வகுத்த போதிலும், தேவின் நற்பெயரைப் பழித்துக் கூறுபவர்கள் அவரது நடிப்புத்திறன் பற்றி குறை பேசினர். எனினும், (1958)ல், வெளிவந்த காலா பாணி திரைப்படம், கட்டம் கட்டப்பட்ட தந்தையின் அவப்பெயரைத் துடைக்க வேண்டி, ஒரு மகன் எந்த அளவிற்கும் செல்லத் துணிவான் என்ற பாத்திரத்தில் நன்கு நடித்து மிகச்சிறந்த நடிகர் விருதினையும் அதற்காக பெற்றார்.

பாடகியும், நடிகையுமான சுரையாவுடன் காதல் வயப்பட்டு, இருவரும் ஆறு திரைப்படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தனர். ஒரு பாடல் காட்சிக்காக படப்பிடிப்பு நடக்கும் தருணத்தில், படகு நீரில் மூழ்கிய பொது தேவ் ஆனந்த் சுரையாவை காப்பற்றப்போக, சுரையா காதல் கொண்டார். அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் அவரின் பாட்டி அந்த உறவை எதிர்த்தார் அதனால், சுரையா தன வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விட்டார்.

அவரது முதல்வண்ணத் திரைப்படம், கைட் வஹீதா ரெஹ்மானுடன் சேர்ந்து நடித்து அதே தலைப்பில் ஆர்.கே.நாராயண் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டதாகும். அந்தப் புத்தகம் திரைப்பட வடிவமாக வெளிவர தேவ் ஆனந்த் அவர்களே தூண்டுதலாக அமைந்தார். இந்தப் பெருந்திட்டம் நிறைவேற்றப்பட அவரே நாராயணனை நேரில் சந்தித்து உரிய இசைவை பெற்றார். தேவ்ஆனந்த் ஹாலிவுட்டில் உள்ள தனது நண்பர்களைத் திரட்டி, இந்தோ-அமெரிக்க கூட்டு-தயாரிப்பைத் தொடங்கி ஒரேசமயத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் படப்பிடிப்பு நிகழ்த்தி 1965ல், இரண்டு திரைப்படங்களையும் வெளியிட்டார். இது இன்றளவும் அவரது மிகச்சீரிய பணியாகக் கருதப்படுகின்றது.

கைட், அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தால் இயக்கப்பட்ட, பலரால் பாராட்டப்பட்ட திரைப்படம் ஆகும். தேவ் அப்படத்தில் ராஜு, என்ற சரளமாக பேசும்திறன் கொண்ட வழிகாட்டியாக, ரோசி (வஹீதா) என்ற சுதந்திரத்திற்காக ஏங்கும் பெண்ணை ஆதரிப்பவராக அவரது நடிப்பு அமைந்து இருந்தது. அவர் தனது சுயலாபங்களுக்காக சுரண்ட வேண்டும் என்று எண்ணவில்லை. அழகும், நுணுக்கமும் ஒருங்கிணையும் வண்ணம்; அன்பு, அவமானம், மற்றும் கடைத்தேற்றம் என பொங்கி வழியும் மன எழுச்சிகளை உடைய ஒரு மனிதனாக தனது நடிப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தி ஒரு பெரும்பாதிப்பை ஏற்படுத்தினார்.

மீண்டும் அவர் விஜய் ஆனந்தோடு ஜுவெல் தீஃப் திரைப்படத்தில் இணைந்து, வைஜயந்திமாலா, தனுஜா, அஞ்சு மகேந்துரு, பார்யால் மற்றும் ஹெலன் போன்ற அழகியர்கள் புடை சூழ நடித்தார்.

அவர்களது அடுத்த கூட்டுப்படைப்பான, ஜானி மேரா நாம் (1970), ஒருபெரும் வெற்றித்திரைப்படமாகியது. எழுபதுகளில் மெல்ல ஒதுங்கத்தொடங்கிய ராஜ் மற்றும் திலிப், போலல்லாமல், தேவ் தொடர்ந்து, காதல் கொண்ட நாயகனாகவே விளங்கினார்.

அவரது கன்னி முயற்சியான பிரேம் பூஜாரி என்ற துப்பறியும் திரைப்பட இயக்கம், தோல்வியானது, ஆனாலும் தேவ் மறுபடியும் 1971ல் அப்போது பரவி இருந்த ஹிப்பி பண்பாட்டினை எடுத்து கூறியதன் மூலம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா திரைப்பட இயக்கம் செய்தது அதிர்ஷ்டகரமாக அமைந்தது. குட்டை-பாவாடை அணிந்த, கஞ்சா புகைபிடிக்கும் பெண் வேடத்தில் தோன்றிய ஜீனத் அமன், உடனே பரபரப்பை உருவாக்கினார். தேவ் ஊடுருவிப்பரவும் தலைப்புப் பொருள்கள் கொண்ட திரைப்படம் உருவாக்குகின்றவர் என்ற பெயர் பெற்றார். அதேவருடத்தில், எ.ஜே. குரானின், தி சிடடேல் நாவலைத் தழுவிய, தேரே மேரே சப்னே திரைப்படத்தில் மும்தாஜுடன் அவர் இணைந்து நடித்தார். அந்தத் திரைப்படத்தை தேவின் சகோதரர், விஜய் இயக்கினார்.

அவரது அறிமுகங்களான, ஜீனத் மற்றும் டினா முனிம் (தேவின் கடைசி அங்கீகரிக்கப்பட்ட 1978ன் வெற்றிப்படம் தேஸ் பர்தேஸ் கதா நாயகி)-இருவரும், ஐம்பதுகளிலேயே, இளமை குன்றா நட்சத்திரம் என்று தேவுக்கு பெயர் வாங்கித்தர காரணமாய் இருந்தனர்.

அரசியலில் விழிப்புணர்வும் ஈடுபாடும் கொண்ட ஒருசில நடிகர்கள் மற்றும் திரைப்படம் உருவாக்குகின்றவர்களில் தேவ் ஆனந்த் ஒருவராக விளங்கினார். அப்போதைய இந்தியப் பிரதமர், இந்திரா காந்தி அவர்கள் கொண்டுவந்த உள்நாட்டு நெருக்கடிநிலை பிரகடனத்தை எதிர்த்து திரையுலக பிரமுகங்களைத் திரட்டி அவர்களை வழிநடத்தினார். அவரது திரையுலகச் நெருக்கங்களில் ஒருசிலரே பங்கேற்றாலும், 1977ல் இந்திராகாந்தியை எதிர்த்து இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். மேலும் அவர் இந்திய தேசியக் கட்சி என்ற ஒரு கட்சியை உருவாக்கி, அதனை பின்னாலில் கலைத்தார்.

சமூதாய ரீதியிலான தாக்கங்களால் அவரது திரைப்படங்கள் அமைந்தவை என்று பல நேர்காணல்களில் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்; அவரது திரைப்படங்கள் அவரது சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே அவர் கருதினார்.

பிற்கால வாழ்க்கைதொகு

1978 ஆம் ஆண்டில் ஹிட் படமான தேஸ் பர்தேசிற்கு பின்னர் 1980கள், 1990கள் மற்றும் 2000களில் வெளிவந்த திரைப்படங்கள் வெற்றி பெறாமல் தோல்வி கண்டன. 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் படத்தில் அவரது அண்மைய தோற்றத்தைக் காணலாம்.

தேவ் ஆனந்தின் திரைப்படங்கள் யாவும் அவைகளின் வெற்றிகரமான பாடல்களுக்காகப் புகழ் பெற்றவையாகும். மிக அதிக புகழ்பெற்ற பாலிவூடின் பாடல்களில் சில அவரது படங்களில் இருந்து வந்தவையாகும். ஷங்கர்-ஜைகிஷேன், ஒ.பி.நய்யார், சச்சின் தேவ் பர்மன் மற்றும் அவர்மகன் ராகுல் தேவ் பர்மன் போன்ற இசையமைப்பாளர்கள், ஹஸ்ரத் ஜைபுரி, மஜ்ரோஹ் சுல்தான்புரி, நீரஜ், ஷைலேந்திரா, ஆனந்த் பகஷி போன்ற பாடலாசிரியர்கள் மற்றும் முகம்மது ரபி,முகேஷ், கிஷோர் குமார் போன்ற பாடகர்களுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய பழக்கம் காரணமாகவே மிகப்புகழ் பெற்ற பாடல்கள் உருவாகின.

செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில் "ரோமான்சிங் வித் லைப்" என்ற அவரது சுயசரிதை பிறந்த நாள் விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கால் வெளியிடப்பட்டது.[2]

விருதுகளும் பாராட்டுதல்களும்தொகு

பிலிம்பேர் விருதுகள்தொகு

 • 1955 - முனிம்ஜி படத்திற்காக சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 • 1958 - கலா பாணி படத்திற்காக சிறந்த நடிகர் விருது வென்றது.
 • 1959 - லவ் மேரேஜ் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 • 1960 - காலா பஜார் சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 • 1961 - ஹும் தோனோ} சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 • 1966 -கைடு படத்திற்காக சிறந்த நடிகர் விருது வென்றது.
 • 1991 - பிலிம்பேர் வழங்கும் [1].

தேசிய கவுரவங்களும் பாராட்டுதல்களும்தொகு

 • 1996 - ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது
 • 1997 - "மும்பை அகாடமியின் அசையும் பிம்பங்கள் விருது" இந்தியத் திரைப்படத் தொழில் துறைக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக வழங்கப்பட்டது. [2]
 • 1998 - "வாழ்நாள் சாதனையாளர் விருது" உஜாலா ஆனந்த்லோக் பிலிம் அவார்ட்ஸ் குழு கல்கத்தா வழங்கியது. [3]
 • 1999 - சன்சூய் "வாழ்நாள் சாதனையாளர் விருது" இந்திய சினிமாவிற்காக அவரின் அளப்பரிய பங்களிப்பிற்காக புதுடெல்லியில் வழங்கியது. [4]
 • 2000 - பிலிம் பார்ப்பவர்கள்' "மில்லேனியத்தின் மெகா மூவி மேஸ்ட்ரோ விருது" மும்பையில் வழங்கியது. [5]
 • 2001 - பத்மா பூஷன் விருது (இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த பொதுத்துறை விருது) [6]
 • 2001 - "ஸ்பெஷல் ஸ்க்ரீன் விருது", இந்திய சினமாவில் அவரது பங்களிப்பிற்காக வழங்கியது. [7]
 • 2001 - "பசுமை மாறாத மில்லேனியும் நட்சத்திரம்" என்ற விருது, ஜீ கோல்ட் த பாலிவுட் விருதுகள் திருவிழாவின் போது வழங்கியது. [8]
 • 2002 - இந்தியாவின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது, திரைத்துறையின் உன்னத பங்களிப்பிற்காக வழங்கியது.
 • 2003 - "வாழ்நாள் சாதனையாளர் விருது" இந்திய சினிமாவின் சீரிய சாதனைக்காக IIFA விருது வழங்கியது’ [9] வழங்கிய இடம் ஜோஹானஸ்பர்க்,சவுத் ஆப்ரிக்கா. [10]
 • 2004 - "லெஜென்ட் ஆப் இந்தியன் சினிமா" விருது அட்லாண்டிக் சிட்டியில் வழங்கப்பட்டது. (யுனைடெட் ஸ்டேட்ஸ்). [11]
 • 2004 - "வாழும் லெஜென்ட் விருது" வழங்கியது பெடெரேஷன் ஆப் இந்தியன் சாம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இண்டுஸ்ட்ரி (FICCI) இந்திய கேளிக்கைத் தொழிலுக்கு அளித்த பங்கிற்கு பாராட்டுதல். [12]
 • 2005 - "சோனி கோல்டன் க்லோரி விருது"[13]
 • 2006 - அக்கினேனி இன்டர்நேஷனல் பௌண்டேஷன். [14] வழங்கிய "ANR விருது"
 • 2006 - "க்லோரி ஆப் இந்திய விருது" - வழங்கியோர் IIAF, லண்டன். [15]
 • 2007 - "பஞ்சாப் ராடன்"(ஜுவேல் ஆப் பஞ்சாப்) விருது வழங்கியது உலக பஞ்சாபியர் அமைப்பு (ஐரோப்பியன் பிரிவு) கலை மற்றும் கேளிக்கை துறைகளில் அவரது தலைசிறந்த பங்களிப்பிற்காக அளிக்கப்பட்டது. [16]
 • 2008 - "வாழ்நாள் சாதனையாளர் விருது" ரம்யா கலாசார அகாடமியோடு் வின்மியூசிக்கிளப்பும் இணைந்து வழங்கியது.[17]
 • 2008 - "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கியது ரோட்டரி கிளப் ஆப் பாம்பே [18]
 • 2008 - IIJS இன் தனிச்சிறப்பான விருதுகள் வழங்கப்பட்டது. [19]
 • 2009 - இந்திய சினிமாவிற்காக சீரிய பங்களிப்பு அளித்தமைக்காக ஸ்டார்டஸ்ட் விருதுகள் வழங்கியது [20] [21]

சர்வதேச கவுரவங்களும் பாராட்டுதல்களும்தொகு

 • ஜூலை 2000ல், நியூயார்க் நகரத்தில் அவருக்கு அப்போதைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் சீமாட்டியான திருமதி.ஹில்லாரி ரோதம் கிளிண்டன், இந்திய சினிமாவிற்கு அளித்த சீரிய பங்களிப்பிற்காக விருது வழங்கி கவுரவம் செய்தார். [22]
 • 2000ல், இந்தோ-அமெரிக்கன் அமைப்பினரால் "மில்லேனியம் நட்சத்திரம்" என்ற விருது கலிபோர்னியா சிலிகான் பள்ளத்தாக்கில் வழங்கப்பட்டது. [23]
 • நியூயார்க் ஸ்டேட் அசெம்ப்ளி உறுப்பினர் டோன்னா பேர்ரார், "நியூயார்க் ஸ்டேட் அசெம்ப்ளி பத்திரம்" என்று அவரது 'சீரிய சினிமாடிக் கலைகள் பங்களிப்புக்காக நியூயார்க் பெரிய மாநிலத்தின் பெருமை மற்றும் நன்றி கருதி 1 மே 2001ல் வழங்கி கவுரவம் அளித்தார். [24]
 • 2005ல், அவருக்கு தனி தேசிய திரைப்பட விருதை நேபாள அரசு நேபாளத்தின் முதல் தேசிய திரைப்பட விழாவில் அளித்தது. இந்த விருது அவரர் திரைபடத் துறைக்கு சீரிய பங்களிப்பு அளித்தமைக்காக வழங்கப்பட்டது.
 • 2007ல் ஸ்வீடன் இந்திய திரைப்பட அமைப்பினர் (SIFA) சார்பாக ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் விருந்தினராக அவரைக் கவுரவித்தனர்.
 • 2008ல் ஸ்காட்லாந்தில் உள்ள போர்வேஸ்ட் ஆப் ஹைலாந்து கவுன்சிலின் இன்வெர்நெஸ் நடத்திய விருந்தில் அவர் பத்தாண்டுகளாக சிறப்பான பணி ஆற்றியமைக்காக கவுரவிக்கப் பட்டார். அந்தப் பிரதேசத்தில் பல நாட்களாக கேன்ஸ் செல்லும் மார்க்கத்தில் ஹை லண்ட்ஸ் மற்றும் தீவுகள் ஃபிலிம் கமிஷன் விருந்தினராக இருந்தமையால் கவுரவிக்கப்பட்டார். [25].

குறிப்புதவிகள்தொகு

 1. பக்கம்1, ரோமன்சிங் வித் லைப் - ஓர் சுயசரிதை எழுதியது தேவ் ஆனந்த், பெங்குயின் புக்ஸ் இந்தியா 2007
 2. http://www.rediff.com/movies/2007/sep/27look.htm

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்_ஆனந்த்&oldid=2767889" இருந்து மீள்விக்கப்பட்டது