படகோட்டி (திரைப்படம்)

1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

படகோட்டி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி டி. கிருஷ்ணசாமி எழுதி[1], டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

படகோட்டி
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புஜி.என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
மனோரமா
நாகேஷ்
விநியோகம்நாகேஷ்வர ராவ்
வெளியீடுநவம்பர் 3, 1964
நீளம்4550 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

இத்திரைப்படம் சுறா மற்றும் திருக்கை என்னும் இரண்டு மீனவ குழுக்களைப் பற்றியது. ஜமீன்தாராக தோன்றும் எம். என். நம்பியார் அவர்கள், மீனவர்கள் மத்தியில் தம்முடைய சூழ்ச்சியின் மூலமாக பிரித்தாளும் கொள்கையை மேற்கொள்வார்.

பாடல்கள்தொகு

விஸ்வநாதன்,ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை வாலி எழுதியுள்ளார். இத்திரைப்படத்தின் தொட்டால் பூ மலரும் பாடல் சுத்ததன்யாசி இராகத்தில் அமைக்கப்பட்டு திரைப்படங்களில் வரும் இராகத்தில் புதுமையை ஏற்படுத்தியது.[2] இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் 2004-ஆம் ஆண்டு நியூ திரைப்படத்திற்காக புதுமையான முறையில் மறுஆக்கம் செய்திருந்தார்.[3]

பாடல் பாடியவர்(கள்) பாடல் வரிகள்
தரைமேல் பிறக்க டி. எம். செளந்தரராஜன் வாலி
தொட்டால் பூ மலரும் டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா வாலி
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் டி. எம். செளந்தரராஜன் வாலி
கல்யாணப் பொண்ணு டி. எம். செளந்தரராஜன் வாலி
பாட்டுக்கு பாட்டெடுத்து டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா வாலி
நான் ஒரு குழந்தை டி. எம். செளந்தரராஜன் வாலி
அழகு ஒரு ராகம் பி. சுசீலா வாலி
என்னை எடுத்து பி. சுசீலா வாலி

நடிப்பு விபரம்தொகு

நடிப்பு கதாப்பாத்திரம்
எம். ஜி. ஆர்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
மனோரமா
நாகேஷ்

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. Anandan 2004, ப. 28:125
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-10-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-07 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-07-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படகோட்டி_(திரைப்படம்)&oldid=3587422" இருந்து மீள்விக்கப்பட்டது