நியூ (திரைப்படம்)

எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நியூ 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜே. சூர்யா இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இது 1988 ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான பிக் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். சிம்ரன், தேவயானி, கிரண் ராத்தோட் ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

நியூ
இயக்கம்எஸ். ஜே. சூர்யா
தயாரிப்புஎஸ். ஜே. சூர்யா
கதைஎஸ். ஜே. சூர்யா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
சிம்ரன்
மணிவண்ணன்
தேவயானி
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்அன்னை மேரி மாதா கிரியேசன்சு
வெளியீடு9 சூலை 2004
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு6 கோடி (US$7,50,000)

நடிகர்கள்

தொகு

கதைச் சுருக்கம்

தொகு

எட்டு வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.

பாடல்கள்

தொகு
நியூ
ஒலிப்பதிவு
வெளியீடுft ft ft ft ft20 மார்ச்சு 2004 (இந்தியா)
ஒலிப்பதிவுபஞ்சதன் பதிவகம்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்
நீளம்36:50
இசைத்தட்டு நிறுவனம்நியூ மியூசிக்
கிளாசிக் ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்அன்னை மேரி மாதா கிரியேசன்சு
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை
'ஆயுத எழுத்து
(2004)
நியூ 'நானி
(2004)

ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்பைடர்மேன் எனத் தொடங்கும் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இதர அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் பரவலான வரவேற்பு பெற்றன.[1][2] 2001 ஆவது ஆண்டில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற எஸ். ஜே. சூர்யா, இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைப்பதாகக் கூறினார். ஆனால் பின்னர் இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.[3] 1964 ஆவது ஆண்டில் வெளியான படகோட்டி திரைப்படத்தில் இடம்பெற்ற தொட்டால் பூ மலரும் பாடலை இப்படத்தில் மறுஆக்கம் செய்திருந்தார்.

அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நியூ"  Blaaze, கார்த்திக், விஜய் பிரகாஷ், சுனிதா சாரதி, தன்வி 4:33
2. "சர்க்கரை"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா 5:53
3. "தொட்டால் பூ மலரும்"  ஹரிசரண், ஹரிணி 5:33
4. "காலையில் தினமும்"  உன்னிகிருஷ்ணன், சாதனா சர்க்கம் 4:24
5. "இப் யூ வான்னா"  சின்மயி, அனுபமா, அபர்ணா 4:18
6. "ஸ்பைடர்மேன்"  குணால் காஞ்சவலா, சாதனா சர்க்கம்  
7. "கும்பகோணம்"  நித்யஸ்ரீ மகாதேவன், மாணிக்க விநாயகம்  

மேற்கோள்கள்

தொகு
  1. "The summer bonanza". The Hindu (Chennai, India). 7 May 2004 இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140611053728/http://www.hindu.com/fr/2004/05/07/stories/2004050701410100.htm. 
  2. "New Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-11.
  3. "Telugu Cinema Etc". Idlebrain.com. 2001-06-12. பார்க்கப்பட்ட நாள் 2013-06-11.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_(திரைப்படம்)&oldid=3710191" இலிருந்து மீள்விக்கப்பட்டது