நானி
நவீன் பாபு காண்ட அல்லது நானி (Naveen Babu Ghanta அல்லது Nani) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.[1] அதன் பின்னர், ஐதராபாக்கத்திலேயே வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.[2] பிறகு, அட்டா சம்மா என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.[3]
நானி | |
---|---|
பிறப்பு | நவீன் பாபு காண்ட பெப்ரவரி 24, 1984 ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இருப்பிடம் | ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–இப்போது |
தனிப்பட்ட வாழ்வு
தொகுநானி ஐதராபாக்கத்தில் பிறந்து வளர்ந்தார். ஆகத்து 12, 2012இல் இவருக்கு அஞ்சனாவுடன் திருமண உறுதி இடம்பெற்றது.[4]
நடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2008 | அட்டா சம்மா | தெலுங்கு | |
2009 | இரைடு | தெலுங்கு | |
2009 | சினேகிட்டுட | தெலுங்கு | |
2010 | பீம்லி கபடி சட்டு | தெலுங்கு | |
2011 | அலா மொதலைந்தி | தெலுங்கு | |
2011 | வெப்பம் | தமிழ் | சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள் |
2011 | பில்ல சமீந்தார் | தெலுங்கு | |
2012 | ஈகா | தெலுங்கு | |
2012 | நான் ஈ | தமிழ் | |
2012 | எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு | தெலுங்கு | |
2012 | நீ தானே என் பொன்வசந்தம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2014 | பைசா | தெலுங்கு | |
2014 | சண்டா பய் கப்பிராசு | தெலுங்கு | படப்பிடிப்பில் |
2014 | ஆஹா கல்யாணம் | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நானி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
- ↑ "நானி சுயவிவரம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
- ↑ அட்டா சம்மா-நகைச்சுவைப் பொழுதுபோக்கான இரண்டரை மணித்தியாலங்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ நானி திருமண நிச்சயதார்த்தம்
- ↑ நானி (6) (ஆங்கில மொழியில்)