மன்னாதி மன்னன்
மன்னாதி மன்னன்(Mannathi Mannan) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எம்.ஜி.ஆர், பத்மினி மற்றும் பலர் நடித்த இத்திரைப்படத்தினை எம். நடேசன் இயக்கியிருந்தார்.கண்ணதாசன் எழுதிய ஆட்டனத்தி ஆதிமந்தி கதையே இத்திரைப்படம் ஆகும்.இக்கதையை சேரதாண்டவம் என்ற தலைப்பில் பாரதிதாசன் பாடியுள்ளார்.
மன்னாதி மன்னன் | |
---|---|
இயக்கம் | எம். நடேசன் |
தயாரிப்பு | எம். நடேசன் |
கதை | கண்ணதாசன் |
இசை | விசுவநாதன் இராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன் அஞ்சலி தேவி பத்மினி பி. எஸ். வீரப்பா |
ஒளிப்பதிவு | ஜி. கே. ராமு சி. ஜே. மோகன் |
படத்தொகுப்பு | சி. பி. ஜம்புலிங்கம் எஸ். கிருஷ்ணமூர்த்தி ராஜன் |
கலையகம் | நடேசன் ஆர்ட் பிக்சர்சு |
விநியோகம் | நடேசன் ஆர்ட் பிக்சர்சு |
வெளியீடு | 19 அக்டோபர் 1960[1] |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சேர நாட்டு இளவரசனான மணிவண்ணன் (எம்.ஜி.ஆர்) அங்கு நடனம் புரிபவளான சித்ராவைக் (பத்மினி) காதல் கொள்கின்றான்.இதனை அறியாத இளவரசனின் தந்தையும் கரிகாலச் சோழனின் மகளான கற்பகவல்லியைப் பெண்கேட்டு தகவலும் அனுப்புகின்றார்.இதனைக் கேட்டுக் கோபம் கொள்ளும் கரிகாலச் சோழனும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவளான மணிவண்ணனின் தாயாரைக் காரணம் காட்டி மணிவண்ணனுக்குப் பெண் கொடுக்கவும் ம்றுத்துக்கூறுகின்றான். இச்செய்தியைக் கேட்டுக் கோபம் கொள்ளும் மணிவண்ணன் கரிகாலச் சோழனின் கொட்டம் அடக்குவதற்காக அந்நாட்டு இளவரசியான கற்பகவல்லியை அபகரித்துவருவதாகத் தாயிடம் கூறித் தனது நண்பனுடன் புறப்பட்டுச் செல்கின்றான்.உறையூரில் இருந்த அரண்மனைக்கரிகிலேயே இருந்த குளத்தில் தோழிகளுடன் நீராடிக் கொண்டிருந்த கற்பகவல்லியைக் காட்டு எருமை ஒன்று தாக்க வந்தது.இதனைப் பார்த்த மணிவண்ணனும் அவளைக் காப்பாற்றுகின்றான்.பின்னர் அவள் தான் அந்நாட்டு இளவரசி எனவும் தெரிந்து கொள்கின்றான் மணிவண்ணன்.பின்னர் அங்கு அவளுடன் தங்கியிருக்கும் அவன் மன்னரிடம் தான் பாண்டிய நாட்டில் குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்த முத்து பைரவன் என்றும் பொய்யைக் கூறுகின்றான் மணிவண்ணன்.
இதற்கிடையில் இவன் காதலித்த நடனம் புரிவளான சித்ராவை வேறொருவன் தன் காம ஆசைக்காக அவளைக் காதலிப்பதாகக் கூறுகின்றான்.இதனை சித்ராவோ மறுக்கின்றாள்.இதற்கிடையில் சோழ நாட்டிற்கு வந்திருப்பவன் சேர நாட்டு இளவரசன் மணிவண்ணனே எனத் தெரிந்து கொள்ளும் கரிகாலச் சோழன் அவனைக் கொல்வதென எத்தனிக்கும் பொருட்டு மணிவண்ணனும் கற்பகவல்லியைக் கடத்தி தப்பியும் செல்கின்றான்.இதே சமயம் சேர நாட்டில் சித்ராவும் தன்னைக் காதலிப்பதாகக் கூறிய மன்னனிடம் தான் மணிவண்ணனைத்தான் காதலிப்பதாகவும் கூறுகின்றாள்.இதனைக் கேட்டுக் கோபம் கொள்ளும் அவன் மணிவண்ணனைக் கொல்வதற்குப் பெரும்படை அனுப்புகின்றான்.இப்படையினை தடுத்து நிறுத்துவதற்காக சித்ரா அவன் ஆசைப்படியே அவன் முன் நடனம் ஆடுகின்றாள் பின்னர் அவன் அவளை தொட முயற்சி செய்யும் பொருட்டு வந்த மணிவண்ணன் அவளைக் காப்பாற்ற வாற்சண்டை போடுகின்றான்.பின்னர் சித்ரா அவன் அழைக்காது வந்தவளெனக் கூறும் தீயவனின் சொற்கேட்டு சித்ரா மீது வெறுப்படைகின்றான் மணிவண்ணன்.பின்னர் கற்பகவல்லியைத் திருமணம் செய்தும் கொள்கின்றான்.இவற்றினை அறிந்து கொள்ளும் சித்ரா புத்தமதத்திற்குத் தன்னை அற்பணித்தும் கோல்கின்றாள்.
அதன் பின்னர் காவேரி நதிக்கரையருகில் விழாவொன்று நடைபெற்றிருந்த சமயம் காவேரி நதிக்கரையில் சித்ராவின் உருவம் தென்படவே மனம் நொந்து கொள்ளும் மணிவண்ணனும் காவேரி ஆற்றினுள் குதித்துக்கொள்கின்றான்.இவனைப் பலர் தேடியும் அவன் கிடைக்கவில்லை இவனைத்தேடி கற்பகவல்லியும் காவேரி நதிக்கரையோரமாகச் செல்கின்றாள்.இறுதியில் சித்ராவால் காப்பாற்றப்படும் மணிவண்ணன் சித்ராவை அடையாளம் கண்டு கொண்டு அவளுடன் வாழ்வதற்கு எத்தனித்தபொழுது அங்கு கற்பகவல்லியும் வந்து சேர்கின்றாள்.இதனை அறிந்து கொள்ளும் சித்ராவும் தன்னை மாய்த்துக் கொள்வதற்காக மலையின் உச்சியிலிருந்து ஆற்றில் குதிக்கின்றாள்.பின்னர் கற்பகவல்லியும் மணிவண்ணனும் முயற்சி செய்தும் அவள் இறுதியில் மரணிக்கின்றாள்.
நடிகர்கள்
தொகுநடிகர் | கதாபாத்திரம் |
---|---|
எம். ஜி. இராமச்சந்திரன் | அரசர் மணிவண்ணன் |
அஞ்சலி தேவி | ராணி கற்பகவல்லி |
பத்மினி | சித்ரா |
பி. எஸ். வீரப்பா | அரசர் கனிகண்ணன் |
ராகினி | |
எம். ஜி. சக்கரபாணி | அரசர் கரிகால் சோழன் |
ஜி. சகுந்தலா | மங்கையர்கரசி |
வீ. ஆர். இராசகோபால் |
பாடல்கள்
தொகுவிசுவநாதன் ராமமூர்த்தி படத்திற்கான இசையமைப்பை மேற்கொண்டனர்.[2][3]
- அச்சம் என்பது மடமையடா
- ஆடாத மனமும்
- கனிய கனிய
- கண்கள் இரண்டும்
- எங்களின் ராணி
- ஆடும் மயிலே
- அவளா இவளா
- காவேரி தாயே
- தண்டைகொண்டு
- நீயோ நானோ
- கலையோடு
- காடு தழைக்க
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mannadhi Mannan". mgrroop. பார்க்கப்பட்ட நாள் 2014-11-07.
- ↑ "Mannathi Mannan ( EP 45 RPM )". AVDigital. Archived from the original on 27 June 2022. பார்க்கப்பட்ட நாள் 27 June 2022.
- ↑ "Mannadhi Mannan (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 27 June 2022. பார்க்கப்பட்ட நாள் 27 June 2022.
- Mannaathi Mannan 1960, ராண்டார் கை, தி இந்து, ஏப்ரல் 29, 2012