ஜி. சகுந்தலா
ஜி. சகுந்தலா (G. Sakunthala) (பிறப்பு: ஆகஸ்ட் 19, 1932) ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மந்திரி குமாரி, மன்னாதி மன்னன், தாய்க்குப்பின் தாரம் அதே கண்கள், இதய வீணை போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 50- 60களின் முற்பகுதியில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1] [2] [3]
ஜி. சகுந்தலா | |
---|---|
தாய்மொழியில் பெயர் | ஜி. சகுந்தலா |
பிறப்பு | சிதம்பரம் (நகரம்), தஞ்சாவூர் | 19 ஆகத்து 1932
இறப்பு | 8 நவம்பர் 2004 | (அகவை 72)
தேசியம் | இந்தியா |
பணி | திரைப்பட நடிகை, நாடக நடிகை, நடனக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1950–1972 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மந்திரி குமாரி, தாய்க்குப்பின் தாரம், மன்னாதி மன்னன், அதே கண்கள், இதய வீணை |
விருதுகள் | கலைமாமணி விருது |
சகுந்தலா 1932 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சிதம்பரத்தில் ஒரு இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், இரா. சு. மனோகர் , எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடன் இவர் நாடகங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட வாழ்க்கை
தொகு"கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தாலும், மந்திரி குமாரி (1950) மூலம் தமிழில் அறிமுகமானார் மந்திரி குமாரி படத்தில் எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக நடித்தார். பிறகு, எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு இணையாக நடித்தார். சின்னதுரை படத்தில் தெ. இரா. மகாலிங்கத்துடன் இரட்டை வேடங்களில் நடித்தார். மு. கருணாநிதி இரு படங்களுக்கும் கதை எழுதினார். இந்த படங்களுக்குப் பிறகு, சகுந்தலாவுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நகைச்சுவை நடிகர், துணை கதாபாத்திரம், ஒரு சில படங்களில் நடனம் ஆடுவதற்கான வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன. இவர் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படம் எம்.ஜி.ஆருடன் ஐதய வீனை. அதன் பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை.[4] [5]
விருதுகள்
தொகு1963 ஆம் ஆண்டில் தமிழக அரசிடமிருந்து கலைமாமணி விருதைப் பெற்றார்.
இறப்பு
தொகுஇவர் நவம்பர் 8, 2004 அன்று தனது 72 வயதில் இறந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மந்திரி குமாரியின் அரச குமாரி ஜி.சகுந்தலா". dinakaran.com. Archived from the original on 2020-10-30. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
- ↑ "எம்ஜிஆரின் ஆரம்பகால வாழ்க்கை..." Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
- ↑ "எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு! - லக லக லக லக... லதா! பகுதி-2". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
- ↑ "ஜி.சகுந்தலா". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
- ↑ "Exclusive biography of #GSakunthala(OldActress) and on her life". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
- ↑ "G.Sagunthala". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2013-09-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.