கே. ராணி (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

க. ராணி (பிறப்பு 19 மே 1958) இவர் இந்தியாவின் 14 ஆவது பதினான்காவது மக்களவைக்கு இராசிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து (தமிழ்நாடு) இட ஒதுக்கீடு பிரிவில் (பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்) தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர். இதற்கு முன் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பாக வெற்றி பெற்றவர்.

க. ராணி
மக்களவை உறுப்பினர்
தொகுதிராசிபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 மே 1958
நாமக்கல், தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
பிள்ளைகள்1 மகள்
வாழிடம்நாமக்கல்
As of 22 செப்ட்ம்பர், 2007
மூலம்: [1]

வகித்த பதவிகள்

தொகு

ராணி தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பில் தலவாசல் தொகுதியிலிருந்து (இட ஒதுக்கீடு) உறுப்பினராக பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் பிரிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]  இவர் பேரவைக்கு 2001 ஆம் ஆண்டு வரை முழு நேர சேவையாக பெண்களுக்கு அதிகாரமளிக்கும் குழுவின் உறுப்பினராக இருந்து சேவை செய்தார்.

ராணி ராசிபுரம் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் போட்டியிடும் தனித் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 14 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப னல குழுவின் உறுப்பினராகவும் 5 ஆகஸ்டு 200716 ஆகஸ்டு 2006 லிருந்து பெண்கள் உரிமைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். முதல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

2014 பதினைந்தாவது மக்களவை, இந்தியப் பொதுத் தேர்தலில்  விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் முந்தைய தொகுதியான ராசிபுரத்திலிருந்து தொகுதி மாறி போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "Rani,Smt. K." Lok Sabha. Archived from the original on 17 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011.
  3. "Rani, Congress’ Villupuram candidate". The Hindu. 31 March 2014. http://www.thehindu.com/news/national/tamil-nadu/rani-congress-villupuram-candidate/article5852158.ece. பார்த்த நாள்: 2017-05-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ராணி_(அரசியல்வாதி)&oldid=3943516" இலிருந்து மீள்விக்கப்பட்டது