இதயக்கமலம்
இதயக் கமலம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இதயக் கமலம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஸ்ரீகாந்த் |
தயாரிப்பு | எல். வி. பிரசாத் பிரசாத் புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் கே. ஆர். விஜயா |
ஒளிப்பதிவு | கே எஸ் பிரசாத் |
வெளியீடு | ஆகத்து 28, 1965 |
நீளம் | 4438 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- கே. ஆர். விஜயா - கமலா, விமலா (இரட்டை வேடம்)
- சீலா
- குமாரி ருக்மணி
- சி. ஆர். லட்சுமி
- ரவிச்சந்திரன்
- டி. எஸ். பாலையா
- எஸ். வி. சகஸ்ரநாமம்
- ஆர். எஸ். மனோகர்
- கே. பாலாஜி
- சிறீராம்
- 'ஜெயக்கொடி' நடராசன்
- பிரபாகர்
- எசு. ஆர். தட்சிணாமூர்த்தி
- ஆரணி இராமசாமி
துணுக்குகள் தொகு
இப்படம் சுனில்தத் சாதனா நடித்த "மேரா சாயா" என்னும் இந்தித் திரைப்படத்தின் மறுவாக்கமாகும்.ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த இந்த வண்ணப்படத்தில் கே.ஆர்.விஜயா இரு வேடமேற்றிருந்தார்.
ஒலிப்பதிவு தொகு
இதயக் கமலம் | |
---|---|
ஒலிப்பதிவு
| |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
நீளம் | 23:14 |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | சரிகமா |
இசைத் தயாரிப்பாளர் | கே. வி. மகாதேவன் |
இதில் கே. வி. மகாதேவன் இசையமைப்பில் பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசீலா பாடிய பாடல்கள் அனைத்துமே பிரபலமாயின. இந்திப் படத்தின் மறுவாக்கமாக இருந்தபோதிலும், பாடல்கள் அவற்றின் சாயலில் அமையாது இருந்தது இப்படத்தின் சிறப்பம்சம்.
- பாடல்கள்[1]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "உன்னை காணாத" | பி. சுசீலா | 03:26 | |
2. | "மலர்கள் நனைந்தன" | பி. சுசீலா | 03:57 | |
3. | "தோள் கண்டேன்" | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | 04:24 | |
4. | "நீ போகுமிடமெல்லாம்" | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | 04:38 | |
5. | "மேளத்த மெல்லத் தட்டு மாமா" | ஜானகி | 04:35 | |
6. | "என்னதான் ரகசியமோ" | பி. சுசீலா | 04:39 | |
7. | "தலைப்பு இசை" | இசை மட்டும் | 02:14 | |
மொத்த நீளம்: |
23:14 |