பத்ரகாளி (திரைப்படம்)

பத்ரகாளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ராணி சந்திரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். எழுத்தாளர் மகரிஷி எழுதிய தமிழ்ப் புதினம் ஒன்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் இதே பெயரில் தெலுங்கில் 1977 இல் தயாரிக்கப்பட்டது.

பத்ரகாளி
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புடி. பாரதி
சினி பாரத்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
ராணி சந்திரா
வெளியீடுதிசம்பர் 10, 1976
நீளம்3831 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பத்ரகாளி திரைப்படத் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார்.[1] கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இதனால், அவர் நடிக்க இருந்த மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்.[2][2][3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரகாளி_(திரைப்படம்)&oldid=2923897" இருந்து மீள்விக்கப்பட்டது