குடும்பம் ஒரு கோவில்
குடும்பம் ஒரு கோவில் (Kudumbam Oru Kovil) என்பது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். ஆனந்தவள்ளி பாலாஜி தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், இலட்சுமி, முரளி, இரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான "கர் துவார்" படத்தின் மறுஆக்கம் ஆகும். இத்திரைப்படத்திற்கு எம். ரங்கா ராவ் இசையமைத்திருந்தார். இப்படத்தின் கன்னடப் பதிப்பான "மனேயே மந்திராலயா" திரைப்படத்திற்கும் இவரே இசையமைத்தார்.
குடும்பம் ஒரு கோவில் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஆனந்தவள்ளி பாலாஜி |
கதை | ஆரூர்தாஸ் (வசனம்) |
இசை | எம். ரங்கா ராவ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் இலட்சுமி முரளி இரஞ்சனி |
ஒளிப்பதிவு | விஸ்வநாத் இராய் |
படத்தொகுப்பு | டி. வாசு |
கலையகம் | சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | சனவரி 26, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். ரங்கா ராவ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.[1][2]
- "குடும்பம் ஒரு கோவில்" – எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
- "மன்மதன் கோயில்" – எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
- "தில்ருபா இராஜா" – வாணி ஜெயராம்
- "குடு குடு" – எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
வெளியீடும் வரவேற்பும்
தொகுகுடும்பம் ஒரு கோயில் திரைப்படம் 1987 சனவரி 26 இந்திய குடியரசு நாளன்று வெளியிடப்பட்டது.[3] தி இந்தியன் எக்ஸ்பிரசின் விமர்சகர் என். கிருஷ்ணசாமி, "திருலோக்சந்தர் திரைப்படத்தின் பெரும்பகுதியில், ஆர்வத்துடன் கண்ணீர்த் துளிகளை மூடி வைத்திருக்கிறார் அல்லது துளிர்விடுகிறார் என்றும், ஆனால் இறுதியில் கண்ணீரின் வெள்ளத்தைத் தூண்டும் வகையில் காட்சிப்பகுதி உள்ளது. என்றும்" எழுதியிருந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kudumbam Oru Kovil Tamil Film EP Vinyl Record by M Ranga Rao". Macsendisk (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 8 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ "Kudumbam Oru Kovil (1987)". Raaga.com. Archived from the original on 27 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2018.
- ↑ ராம்ஜி, வி. (26 January 2019). "கே.பாலாஜிக்குப் பிடித்த ஜனவரி 26ம் தேதி!" [K. Balaji liked the date 26 January!]. Kamadenu. Archived from the original on 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 3 July 2020.
- ↑ Krishnaswamy, N. (6 February 1987). "Homage". இந்தியன் எக்சுபிரசு: pp. 14. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870206&printsec=frontpage&hl=en.