அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)

அக்னி நட்சத்திரம் 1988 இல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர்.

அக்னி நட்சத்திரம்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புஜி. வெங்கடேஸ்வரன்
கதைமணிரத்னம்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
பிரபு
விஜயகுமார்
அமலா
நிரோஷா
ஜெயச்சித்ரா
சுமித்ரா
வி. கே. ராமசாமி
ஜனகராஜ்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
விநியோகம்சுஜாதா புரொடக்ஷன்ஸ்
வெளியீடு15 ஏப்ரல் 1988
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகைதொகு

நாடகப்படம்

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கௌதம் (பிரபு) மற்றும் அஷோக் (கார்த்திக்) இருவரும் பகையின் காரணமாக சண்டைகள் கொள்வர். இதன் காரணம் அஷோக்கின் தாயாரையும் கௌதமின் தாயாரையும் இவர்களது தந்தை மணம் செய்து கொண்டார் என்பதே ஆகும். மேலும் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பகை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இவர்கள் தந்தையின் அலுவலகப் பிரச்சினைகள் காரணமாக இவரைக் கொலை செய்யப்பட இவரின் எதிரியின் முயற்சியால் இரு சகோதரர்களும் ஒற்றுமை கொள்கின்றனர். பின்னர் தம் தந்தையினைக் கொலை செய்ய முயன்றவனை இருவரும் பழி தீர்க்கின்றனர்.

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 நின்னுக்கோரி வர்ணம் சித்ரா வாலி 04:37
2 ஒரு பூங்காவனம் எஸ். ஜானகி 04:25
3 ராஜா ராஜாதி இளையராஜா 04:42
4 ரோஜாப்பூ ஆடி வந்தது எஸ். ஜானகி 04:27
5 தூங்காத விழிகள் கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 04:41
6 வா வா அன்பே கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 04:40

மேற்கோள்கள்தொகு

  1. "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". 29 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html. 
  2. "Agni Natchathiram Songs". raaga. January 2, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்தொகு