பூவரசன்
பூவரசன் (Poovarasan) 1996 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் ரச்சநா பானர்ஜி நடிப்பில், இளையராஜா இசையில், எம். கபார் தயாரிப்பில், கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]
பூவரசன் | |
---|---|
இயக்கம் | கோகுல கிருஷ்ணன் |
தயாரிப்பு | எம். கபார் |
கதை | கோகுல கிருஷ்ணன் |
திரைக்கதை | கோகுல கிருஷ்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | கே. ஆர். கௌரிசங்கர் டி. ஆர். சேகர் |
கலையகம் | தாஜ் இன்டர்நேஷனல் |
விநியோகம் | தாஜ் இன்டர்நேசனல் |
வெளியீடு | ஆகத்து 9, 1996 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுஉக்கிரபாண்டியின் (விஜயகுமார்) மனைவிக்கு (சுஜாதா) குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையால் தன் மனைவிக்கு ஆபத்து என்ற ஆரூடத்தை நம்பி அந்தக் குழந்தையை தன் மைத்துனர் கோவிந்திடம் (கவுண்டமணி) கொன்றுவிடுமாறு கொடுக்கிறார். கோவிந்த் குழந்தையைக் கொல்லச்சொல்லி சுடலையிடம் (சந்திரசேகர்) கொடுக்கிறார்.
25 வருடங்கள் கழித்து பூவரசன் (கார்த்திக்) கோவிந்த் மூலமாக உக்கிரபாண்டி வீட்டில் வேலைக்குச் சேர்கிறான். பூவரசனும் காவேரியும் (ரச்சநா பானர்ஜி) ஒருவரையொருவர் விரும்புகின்றனர். ஒருநாள் சேனாதிபதியின் (ராதாரவி) உயிரைக் காப்பாற்றும் பூவரசன் அவரின் அன்புக்குரியவனாகிறான்.
சேனாதிபதியின் மகன் சின்ராசுவும், உக்கிரபாண்டியின் மகள் சுந்தரியும் காதலிக்கிறார்கள்.பெற்றவர்கள் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க சம்மதித்தாலும், சேனாதிபதி தான் உக்கிரபாண்டியால் முன்பு அவமானப்படுத்தப்பட்டதற்குப் பழி வாங்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறார். அதை உக்கிரபாண்டி மறுக்க திருமணம் நின்றுவிடுகிறது. அவர்களுடைய திருமணத்தை பூவரசன் நடத்தி வைக்கிறான்.
இதைக் குற்றமாகக் கருதும் கிராமத்துப் பெரியவர்கள் பூவரசன் "பூமி பூஜை" எனும் அக்கிராமத்தில் கொடுக்கப்படும் தண்டனைச் சடங்கிற்கு உட்பட உத்தரவிடுகின்றனர். அதே சமயம் சுடலையை சந்திக்கும் கோவிந்த், சுடலை தான் கொடுத்தக் குழந்தையைக் கொல்லவில்லை என்பதையும் அந்த குழந்தைதான் பூவரசன் என்ற உண்மையையும் அறிந்துகொள்கிறான். உக்கிரபாண்டியைக் கொல்ல சேனாதிபதி அனுப்பும் ஆட்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும் பூவரசன் இறுதியில் துப்பாக்கிக்குண்டுக்குப் பலியாகிறான்.
நடிகர்கள்
தொகு- கார்த்திக் - பூவரசன்
- ரச்சநா பானர்ஜி - காவேரி
- விஜயகுமார் - உக்கிரபாண்டி
- சுஜாதா - உக்கிரபாண்டியின் மனைவி
- ராதாரவி - சேனாதிபதி
- கவுண்டமணி - கோவிந்த்
- செந்தில் - சமுத்திரம்
- சந்திரசேகர் - சுடலை
- தளபதி தினேஷ் - 3 வீட்டுக்காரர்களில் ஒருவர்
இசை
தொகுபடத்தின் இசையமைப்பாளர் இளையராஜா[4]. பாடலாசிரியர் வாலி.[5]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | ராசமகன் ராசனுக்கு | எஸ். பி. பாலசுப்ரமணியன் , கே.எஸ். சித்ரா | 5:07 |
2 | ராசாத்தி | எஸ். பி. பாலசுப்ரமணியன் , கே.எஸ். சித்ரா | 5:00 |
3 | இந்த பூவுக்கொரு | எஸ். பி. பாலசுப்ரமணியன் , கே.எஸ். சித்ரா | 5:12 |
4 | கட்டிக்கிடலாம் | எஸ். பி. பாலசுப்ரமணியன் , கே.எஸ். சித்ரா | 5:15 |
5 | பொட்டு வச்ச கிளியே | எஸ். பி. பாலசுப்ரமணியன் | 4:50 |
6 | ஆரம்பம் நல்லாருக்கும் | மலேசியா வாசுதேவன் | 4:37 |
7 | பூவரசன் டி | 4:37 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பூவரசன்".
- ↑ "பூவரசன்". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.
- ↑ "பூவரசன்". Archived from the original on 2012-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.
- ↑ "பாடல்கள்".
- ↑ "பாடல்கள்".