சொல்ல சொல்ல இனிக்கும்

2009 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம்

சொல்ல சொல்ல இனிக்கும் (Solla Solla Inikkum) என்பது 2009 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம். இப்படத்தை ஜி. முரளி அப்பாஸ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ராசி என்ற படத்தை இவர் இயக்கினார். இந்த படத்தில் நவ்தீப், மதுமிதா, மல்லிகா கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். பிரகாஷ் ராஜ், சுஜா, சாரா ஆலம்பரா, சந்தானம், லிவிங்ஸ்டன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பணிகள் 14 மே 2008 இல் தொடங்கப்பட்டது,[1] 2009 கோடையில் வெளியிடப்பட்டது.

சொல்ல சொல்ல இனிக்கும்
இயக்கம்ஜி. முரளி அப்பாஸ்
கதைஜி. முரளி அப்பாஸ்
இசைபரத்வாஜ்
நடிப்புநவ்தீப்
மதுமிதா (நடிகை)
மல்லிகா கபூர்
பிரகாஷ் ராஜ்
சுஜா வருணே
சாரா ஆலம்பரா
சந்தானம்
லிவிங்ஸ்டன்
ஆஷிஷ் வித்யார்த்தி
ஒளிப்பதிவுஆர்தர் ஏ. வில்சன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
விநியோகம்எம் சினிமா
வெளியீடு18 செப்டம்பர் 2009 (2009-09-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

விஜயகுமாரின் மகன் சத்யா ( நவ்தீப் ) பட்டப்படிப்பை முடித்துவிட்டு நண்பர்களான குரு ( அபிநய் ), சத்யன் ( சத்யன் ) ஆகியோருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அஞ்சலியை (சாரா அலம்பரா) சந்திக்கும் வரை அவனது வாழ்க்கை சிக்கலற்றதாகவே செல்கிறது. அஞ்சலியுடன் நட்பில் தொடங்கி அது காதலாக மாறுகிறது. அவன் அவளிடம் தன் காதலை சொல்லும்போது, அவள் அதை நிராகரிக்கிறாள். தான் அதுபோல பழகவில்லை என்கிறாள். அடுத்து மேக்னா (சுஜா) வருகிறாள், அவர்களிருவரும் பழகுகிறார்கள். அவள் அவனினிடம் பொழுதை போக்கவே பழகுவதாக கூறுகிறாள். சத்யா ராதிகாவை ( மதுமிதா ) சந்திக்கிறான். அவர்கள் நெருங்கிய நண்பர்களாக ஆகிறார்கள். குருவும் அவளுடன் பழகுகிறான். ராதிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சத்யா தெரிவிக்க முடிவு செய்தபோது, அவளும் குருவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறி குண்டை வீசுகிறாள். குரு அவளை ஊர்சுற்ற அழைத்துச் சென்றான். அவளைப் பயன்படுத்திக் கொண்ட பிறகு, அவன் அவளை விட்டு விலகுகிறான். சத்யா இடையில் நுழைந்து அவளை திருமணம் செய்து கொள்வேண்டும் என்று குருவை வலியுறுத்துகிறான். குரு பத்ரி நாராயணனிடம் ( பிரகாஷ் ராஜ் ) அடைக்கலம் ஆகிறான். பத்ரி நாராயணன் சமுதாயத்தில் நல்ல செல்வாக்குள்ள மனிதர். அவர் குருவுக்கு பக்கபலமாக இருக்கிறார். சத்யா போராடி அவளுக்கு நீதிபெற்றுத் தருகிறான். அதன்பிறகு அனு ( மல்லிகா கபூர் ) சத்யாவின் வாழ்க்கையில் நுழைகிறாள்.

நடிப்புதொகு

இசைதொகு

இப்படத்திற்கான இசையை பரத்வாஜ் அமைத்துள்ளார்.

பாடல்கள்
# பாடல்படகர்கள் நீளம்
1. "சகியே சகியே"  பென்னி தயாள் 5:12
2. "ராஜாதிராஜா இல்ல"  பென்னி தயாள் 4:36
3. "காதல் ஒரு பள்ளிக்கூடம்"  எம். எம். அப்துல்லா 4:58
4. "ஹே அழகிய பெண்ணே"  ஹரிசரண் 4:10
5. "அச்சம் வெட்கம்"  ஜனனி பரத்வாஜ் 4:22
மொத்த நீளம்:
24:13

வெளியீடுதொகு

ரெடிஃப் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டை கொடுத்தது. மேலும் "சொல்ல சொல்ல இனிக்கும் நல்ல உள்ளடக்கம் கொண்டது. படம் நன்றாகத் தொடங்குகின்றது, அது மந்தமாகவும், மிகைக் காட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால், உண்மையில் அதன் பார்வையாளர்களை கவர்வதற்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டது.[3]

குறிப்புகள்தொகு

  1. "Solla Solla Inikkum Movie Launch". IndiaGlitz. 2008-05-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Solla Solla Inikkum: A Film for youth". tamilwire.com. 2009-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-31 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://movies.rediff.com/report/2009/sep/21/south-tamil-movie-review-solla-solla-inikkum.htm

வெளி இணைப்புகள்தொகு