அபிநய்

நடிகர்

அபிநய் (அபினய் கிங்கர்) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் கஸ்தூரி ராஜா இயக்கிய 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். ஓரியோ பிஸ்கட் விளம்பரத்திலும் இவர் தோன்றினார்.

அபிநய்
பிறப்பு20 சூன் 1981 (1981-06-20) (அகவை 42)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
மற்ற பெயர்கள்அபினய் கிங்கர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது வரை

தொழில் தொகு

கஸ்தூரி ராஜாவின் துள்ளுவதோ இளமை (2002) படத்தில் தனுஷ் மற்றும் ஷெரின் ஆகியோருடன் அபினய் அறிமுகமானார்.[1] இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் தோற்றத் தொடங்கினார். குறிப்பாக ஜங்ஷன் (2002), சிங்காரச் சென்னை (2004), பொன் மேகலை (2005) ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.[2][3][4]

2000 களின் பிற்பகுதியில், இவர் துணை வேடங்களில் நடிக்கத் துவங்கினார். குறிப்பாக சொல்ல சொல்ல இனிக்கும் (2009), பாலைவனச் சோலை (2009) உள்ளிட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தார்.[5][6][7]

இவர் துப்பக்கி (2012) படத்தில் வித்யூத் ஜம்வால்வுக்கு பின்னணி குரல் வழங்கி பின்னணி குரல் கலைஞராகவும் படங்களில் பணியாற்றியுள்ளார்.[8]

திரைப்படவியல் தொகு

படங்கள் தொகு

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 துள்ளுவதோ இளமை விஷ்ணு தமிழ்
ஜங்ஷன் கண்ணன் தமிழ்
கெயேதம் தூரத் மலையாளம்
2003 சக்சஸ் தமிழ்
சித்ரகூடம் மலையாளம்
2004 சிங்கார சென்னை சூர்யா தமிழ்
2005 தாஸ் குணா தமிழ்
பொன் மேகலை மலர்வண்ணன் தமிழ்
2007 வைரஸ் மலையாளம்
2008 தொடக்கம் சிண்டோ தமிழ்
2009 சொல்ல சொல்ல இனிக்கும் குரு தமிழ்
பாலைவனச் சோலை யுவன் தமிழ்
ஆறுமுகம் ஆறுமுகம் தமிழ்
கார்த்திக் அனிதா கௌரி சங்கர் தமிழ் விருந்தினர் தோற்றம்
2010 கதை ஆனந்த் தமிழ்
2012 ஆரோகனம் கார்த்திக் தமிழ்
2013 என்றென்றும் புன்னகை கார்த்திக் தமிழ்
2014 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தொழிலதிபர் தமிழ்

பின்னணிக் குரல் கலைஞராக தொகு

விளம்பரங்கள் தொகு

  • ஓரியோ பிஸ்கட்
  • 3 ரோசஸ் தேநீர்

குறிப்புகள் தொகு

  1. HostOnNet.com. "BizHat.com - Thulluvatho Ilamai Review. Dhanush, Abhinay, Ramesh, Sherin, Shilpa, Gangeshwari, Vijay Kumar, Thalaivasal Vijay, Ramesh Khanna, Pyramid Natarajan". Movies.bizhat.com. Archived from the original on 2014-01-06. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
  2. "Ponmeghalai". 30 November 2005. Archived from the original on 30 November 2005.
  3. "Jjunction". 23 October 2004. Archived from the original on 23 October 2004.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  5. "Solla Solla Inikkum". The New Indian Express.
  6. "Solla Solla Inikkum is my comeback film - Abhinay". South Indian Cinema Magazine. 22 September 2009. Archived from the original on 5 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  7. "Review: Solla ... Inikkum is mildly interesting". Rediff.
  8. "A Parallel Between Thuppakki And Thulluvadho Ilamai - Thuppakki - Vidyut Jamwal - Vijay - Thulluvadho Ilamai - Abhinay - Tamil Movie News". Behindwoods.com. 2012-11-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிநய்&oldid=3658013" இலிருந்து மீள்விக்கப்பட்டது