கலாபவன் மணி

தமிழ்த் திரைப்பட நடிகர்

கலாபவன் மணி (1 சனவரி 1971 – 6 மார்ச் 2016) தென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர்.[2]

கலாபவன் மணி
பிறப்புமணி ரத்தினம்
சனவரி 1, 1971(1971-01-01) [1]
கேரளா, இந்தியா
இறப்புமார்ச்சு 6, 2016(2016-03-06) (அகவை 45)
எர்ணாகுளம், கேரளா, இந்தியா
பணிநடிகர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், பலகுரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1995–2016
வாழ்க்கைத்
துணை
நிம்மி
பிள்ளைகள்சிறீ லட்சுமி
வலைத்தளம்
www.kalabhavanmani.in

இவர் நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடியில் பிறந்தவர். மலையாள திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு மூவிருளி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்ற திரைப்படத்தில் நடித்ததிற்காக 2000ஆம் ஆண்டில் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

நடித்த திரைப்படங்கள் தொகு

தமிழ்த் திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் குறிப்புகள்
1998 மறுமலர்ச்சி வேலு
2001 வாஞ்சிநாதன்
2002 ஜெமினி தேஜா
2003 தென்னவன்
நாம்
ஜே ஜே
பந்தா பரமசிவம் சிவம்
தத்தித் தாவுது மனசு
புதிய கீதை ரெட்டியார்
காதல் கிசுகிசு
2004 ஏய்
குத்து கதாநாயகியின் தந்தை
போஸ்
சிங்கார சென்னை
செம ரகளை
2005 அந்நியன் வீட்டின் உரிமையாளர் சிறப்புத் தோற்றம்
செவ்வேல்
ஆறு காவல்துறை அதிகாரி
ஜித்தன்
மழை கதாநாயகியின் தந்தை
2006 பாசக்கிளிகள் ஆளக்காலன்
உனக்கும் எனக்கும் மார்க் மாயாண்டி
2007 வேல் சக்கரப்பாண்டி
2009 மோதி விளையாடு ராசன் வாசுதேவ்
2010 எந்திரன் பச்சமுத்து சிறப்புத் தோற்றம்
2012 யாருக்குத் தெரியும்
2014 சங்கராபுரம்
கங்காரு
2015 லவ் குரு
கலை வேந்தன்
பாபநாசம் காவலர் பெருமாள்

இறப்பு தொகு

ஈரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக 2 நாட்களாக கொச்சியில் உள்ள அம்ருதா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்ற வந்த கலாபவன் மணி மார்ச்சு 6 அன்று இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.[3][4]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. https://tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/actor-kalabhavan-mani-passes-away-at-45-248415.html
  3. "Popular Malayalam Actor Kalabhavan Mani Dies After Battling Liver Disease". என் டி டி வி. 6 மார்ச் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Actor Kalabhavan Mani passed away". larazonsanluis. 2016-03-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 மார்ச் 2016 அன்று பார்க்கப்பட்டது. Text "Rest in Peace" ignored (உதவி)

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாபவன்_மணி&oldid=3548414" இருந்து மீள்விக்கப்பட்டது