தென்னவன் (திரைப்படம்)

2003 திரைப்படம்

தென்னவன் 2003 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் எம்.நந்தகுமாரன் எழுதி இயக்கினார். இப்படத்தை விஜயகாந்த் தயாரித்தார். தென்னவன் ஐ.ஏ.எஸ்., தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடுகிறார். இப்படத்திக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். 2003 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று இப்படம் வெளியானது. பின்னர் இப்படம் தெலுங்கில் எலக்‌ஷன் கமிஷ்னர் என மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. [1]

தென்னவன்
இயக்கம்எம்.நந்தகுமாரன்
தயாரிப்புஎல்.கே.சுதீஷ்
கதைஎம்.நந்தகுமாரன்
மனோகர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிஜயகாந்த்
கிரண் ராத்தோட்
நாசர்
ஊர்வசி (நடிகை)
விவேக் (நகைச்சுவை நடிகர்)
வீ. ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவுரமேஷ் குமார்
படத்தொகுப்புவாசு,சலிம்
வெளியீடுஆகத்து 15, 2003 (2003-08-15)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் மற்றும் குழுவினர் தொகு

குழுவினர் தொகு

கதை தொகு

நடிகர் விஜயகாந்த் தென்னவன் என்ற கதாபத்திரத்தில் தேர்தல் அதிகாரியாக வந்து பணிகளை சிறப்பாக செய்கிறார். மக்களின் வாக்கு உரிமையை பற்றி விளக்கமாக எடுத்து சொல்கிறார். நாசர்(இளந்திரயன்) வில்லனாக முதலமைச்சராக இருந்து ஊழலில் மாட்டி பதவியை இழந்து தன் மனைவி புஷ்பலதாவை பதவி எற்றி விடுகிறார். ஊர்வசி(புஷ்பலதா) நல்ல நகைச்சுவையாக கணவன் பேச்சை கேட்டு அனைத்து வேலைகளையும் செய்கிறார். விவேக் ஒரு சிறிய ரெடியாக வலம் வந்து பிறகு அரசியலவதியாக முன்னேற்றம் அடைகிறார். வசனங்கள் பக்கம் பக்கமாக பேசப்படுகிறது பல சமயங்களில் எரிச்சலை எற்படுத்துகிறது.

ரூபாய் 25 இலட்சத்திற்கு நீதிமன்றம் போல அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, பொள்ளாச்சி,ஒரிசா மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய இடத்தில் எடுத்து உள்ளனார். நியாமான முறையில் ஒரு தேர்தலை நடத்தி இப்படத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார் இயக்குனர்.

ஒலிப்பதிவு தொகு

தென்னவன்
 
ஒலித்தடம்
வெளியீடு
7 ஆகத்து 2003 (இந்தியா)
ஒலிப்பதிவு2002
இசைத்தட்டு நிறுவனம்பவ் ஸ்டார் ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
புதிய கீதை
(2003)
தென்னவன்
(2003)
குறும்பு
(2003)

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், இவர் முதல் முறையாக விஜயகாந்த் படத்தில் பணியாற்றினார். ஆகஸ்ட் 7, 2003 அன்று வெளியிடப்பட்ட இந்த ஒலிப்பதிவில், பா. விஜய், நா. முத்துக்குமார், சினேகன் மற்றும் முத்து விஜயன் பாடல் வரிகளை எழுதினார்கள். குரும்பு என்ற யுவன் சங்கர் ராஜாவின் மற்றொரு படத்தின் ஒலிப்பதிவும் அதே நாளில் வெளியிடப்பட்டது. 'துறுதுது துறுதுது' என்ற பின்னணி இசை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

வ. எண் பாடல் பாடகர்(கள்) காலம் வரிகள்
1 "வட்ட வட்ட" உன்னி மேனன், பத்மலதா 4:12 முத்து விஜயன்
2 "வினோதனே" சீனிவாஸ், மகாலட்சுமி ஐயர் 4:50 நா. முத்துக்குமார்
3 "தேசக் காற்றே" சங்கர் மகாதேவன், கங்கா 4:13 பா. விஜய்
4 "இங்கிலிஷில் பாடினா" மால்குடி சுபா 4:01 பா. விஜய்
5 "வினோதனே   - II " சீனிவாஸ், ஸ்ரீலேகா பார்த்தசாரதி 4:49 நா. முத்துக்குமார்
6 "அடி சாமி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஷர்மிளா 4:24 சினேகன்

தயாரிப்பு தொகு

பி.வாசு, ராஜசேகர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றிய அறிமுக எம்.நந்தகுமார் இப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் வசனக்கர்த்தா எழுத்தாளர் ஆர்.என்.ஆர் மனோகரன் ஒரு சிறிய பாத்திரத்தில் விவேக்கைக் கொல்ல வரும் ஒரு குண்டராக தோன்றினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது, மேலும் சில சண்டைக் காட்சிகள் ஒய்.எம்.சி.ஏ மற்றும் தேவி தியேட்டர் போன்ற உயரமான கட்டிடங்களின் மேல் மற்றும் பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஒரு தொகுப்பில் படமாக்கப்பட்டன. முன்னணி ஜோடிக்கு இடையிலான சில காட்சிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் படமாக்கப்பட்டன. அதே நேரத்தில் ஏ.வி.எம் மற்றும் பிரசாத் படப்பிடிப்பு வளாகத்தில் அமைக்கப்பட்ட தொகுப்பில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. நடன இயக்குநர் கலா நடனம் அமைத்த இந்த பாடலில் சுமார் நூறு நடனக் கலைஞர்கள் முன்னணி ஜோடியைச் சுற்றி நடனமாடினர். ஐந்து தொகுப்பில் படமாக்கப்பட்ட இந்த பாடல், ஒரே நேரத்தில் மூன்று ஒளிப்பட கருவில் படமாக்கப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் முன்னணி ஜோடியுடன் மற்றொரு பாடல் படமாக்கப்பட்டது.

வரவேற்பு தொகு

ஹிந்து நாள் இதழில் : "இயக்குநர் மற்றும் கதாநாயகர் முதலிய அனைவரும் படத்தின் மீது விருப்பம் இல்லாதது போல இருந்தது" என்று எழுதினார்.[2]

குறிப்புகள் தொகு

  1. https://www.youtube.com/watch?v=YYbQzLO4WE8
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னவன்_(திரைப்படம்)&oldid=3941283" இலிருந்து மீள்விக்கப்பட்டது