பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) ஒரு இந்திய அரசியல்வாதியும், நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் மனைவியும் ஆவார். இவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். தேசிய அளவிலான தனித்திறன் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையும் ஆவார். 1990 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாள் விஜயகாந்த் பிரேமலதாவை மணந்தார். இவர்களது திருமணம் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி தலைமையில் நடந்தது.[1] விஜயகாந்த் - பிரேமலதா இணையருக்கு விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைத் தொடங்கியதிலிருந்து கட்சியில் பிரச்சார பலமாக இவர் திகழ்கிறார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளராகவும் இவர் திகழ்ந்தார்.[2][3] தமிழகத்தில் நடந்த பல்வேறு பொது மற்றும் இடைத்தேர்தல்களின் போது இவர் தமிழகமெங்கும் பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.[4]
மேற்கோள்கள்தொகு
- ↑ "பிரேமலதா விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு". சமயம் செய்திகள். 9 ஏப்ரல் 2019. 10 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தேசிய முற்போக்கு திராவிட கழகம்". விகடன். 10 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தேசிய முற்போக்கு திராவிட கழகம்". விகடன். 10 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Premalatha Vijayakanth Wiki, Biography, Age, Caste, Images". Newsbugz. 10 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது.