கலை வேந்தன்

2015 திரைப்படம்

கலை வேந்தன் (Kalai Vendhan) என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். கே. பரசுராம் எழுதி இயக்கிய இப்படத்தில், அஜய், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படமானது 7 ஆகத்து 2015 அன்று வெளியானது.[1][2][3]

கலை வேந்தன்
இயக்கம்ஆர். கே. பரசுராம்
தயாரிப்புஎஸ். கமலக்கண்ணன்
கதைஆர். கே. பரசுராம்
இசைசிறீகாந்து தேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். கார்த்திக்
படத்தொகுப்புசசிகுமார்
கலையகம்எஸ்கே. பிலிம் இண்டர்னேசனல்
வெளியீடு7 ஆகத்து 2015 (2015-08-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

படத்தின் முக்கிய கருப்பொருளாக வோவினம் என்ற வியட்நாமிய தற்காப்புக் கலையை அடிப்படையாக உள்ளது.[4] இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க சனம் ஷெட்டி ஒப்பந்தமானார். 1970களில் இருந்து வந்த ஒரு பாரம்பரிய பெண் மற்றும் ஒரு நவீன கால கல்லூரி மாணவி என இருவேடங்களை ஏற்றார். சனம் தனது நடிப்பு வாழ்க்கையில் முதல்முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்தார். மேலும் சண்டைக் காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ளாமல் தானே நடித்தார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மதுரை சுற்றியுள்ள காடுகளில் படமாக்கப்பட்டன.[5][6]

படத்ததிற்கான இசையை சிறீகாந்து தேவா அமைத்தார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆரிரரோ ஆரிரரோ"  ஜானகி ஐயர்  
2. "ஜாலி ஜாலிடா நண்பா"  ரஞ்சித்  
3. "ஏதோ ஒன்று நெஞ்சுக்குள்ளே"  கார்த்திக், சின்மயி  
4. "எங்கே எங்கே"  ஹரிஷ் ராகவேந்திரா  

வெளியீடு மற்றும் வரவேற்பு

தொகு

படம் 7 ஆகத்து 2015 அன்று வெளியானது.[1] மாலை மலரின் விமர்சகர் ஒருவர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார். திரைப்பட தயாரிப்பின் பெரும்பாலான அம்சங்களை விமர்சித்தார்.[7] எண்டர்டெயின்மெண்ட் போர்ட்டல் இஃப்லிக்ஸ்.இன் விமர்சகர் இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்தார், இயக்குனர் "தற்காப்பு தற்காப்புக் கலைகளை மையமாகக் கொண்ட ஒரு கதையுடன் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தை உருவாக்க முயற்சித்தார்." என குறிப்பிட்டார்.[8]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "கலை வேந்தன் - முன்னோட்டம்". cinema.dinamalar.com.
  2. "கலை வேந்தன்". Hindu Tamil Thisai.
  3. "காதல் சண்டை! - Kungumam Tamil Weekly Magazine". webcache.googleusercontent.com. Archived from the original on 2020-10-30. பார்க்கப்பட்ட நாள் 2021-03-08.
  4. "Kalai Vendhan || Kalai Vendhan". Iflicks. July 31, 2015. Archived from the original on அக்டோபர் 27, 2020. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 8, 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "கலை வேந்தன் படத்திற்காக போடப்பட்ட செட்டை பார்த்து வியந்த நடிகர், நடிகைகள்!". Dinamani.
  6. "Enjoyed performing stunts for 'Kalaivendhan': Sanam Shetty". Zee News. November 8, 2014.
  7. "கலை வேந்தன்". maalaimalar.com. August 8, 2015.
  8. "Kalai Vendan". Iflicks. August 10, 2015. Archived from the original on அக்டோபர் 26, 2020. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 8, 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை_வேந்தன்&oldid=3659748" இலிருந்து மீள்விக்கப்பட்டது