அம்பானி சங்கர்

தமிழ்நடிகர்

அம்பானி சங்கர் (Ambani Shankar) என்பவர் இந்திய நடிகராவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நடித்துவருகிறார். இவர் ஜி (2005), அம்பாசமுத்திரம் அம்பானி (2010) உள்ளிட்ட படங்களில் தோன்றியுள்ளார், மேலும் இவரது திரைப் பெயரை பிந்தைய படத்திலிருந்து பெற்றார்.

அம்பானி சங்கர்
பிறப்புகே. சங்கரநாராயணன்
17 மே 1988 (1988-05-17) (அகவை 35)[1]
தமிழ்நாடு, திருமங்கலம் (மதுரை)
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
மோனிகா நந்தினி[2]

தொழில் தொகு

சங்கர் மதுரையின் திருமங்கலத்தில் வளர்ந்தார். நடிகர் வடிவேலுவின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட இவர், திரைப்படங்களில் நடிக்க 2004 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்றார். திரைப்படங்களில் வாய்ப்பு பெற முடியாமல், கே. பாக்யராஜின் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றத் தொடங்கினார். ஜி (2005) படத்தில் சாலை ஓர மிதிவண்டி புழுது பார்ப்பவர் பாத்திரத்தை என். லிங்குசாமி அளித்தார்.[3] இந்திரலோகத்தில் நா. அழகப்பன் (2008) மற்றும் குசேலன் (2008) உள்ளிட்ட படங்களில் சிறிய நகைச்சுவை வேடங்களில் தொடர்ந்து நடித்தார்.

சங்கருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது அம்பாசமுத்திரம் அம்பானி (2010) படமாகும். அதில் கருணாசுடன் இணைந்து ஒரு எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[4] ரெடிஃப்.காம் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டியது.[5] அதேபோல், Sify.com இவரை "ஒரு நல்ல நடிகர்" என்று குறிப்பிட்டது.[6][7] பின்னர் இவர் தனது திரைப் பெயருக்கு முன்னொட்டாக "அம்பானி"யைச் சேர்த்தார்.

2013 இல், சங்கர் நடிகர் விஜயுடன் இணைந்து ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநில பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.[8][9]

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2005 ஜி
2005 ஆறு சின்னா
2006 பேரரசு ஐஸ்வர்யாவின் நண்பர்
2007 வல்லவன்
2007 கருப்புசாமி குத்தகைதாரர்
2007 பிறகு சமராசத்தின் உதவியாளர்
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
2008 இன்பா
2008 சக்கர வியூகம் கண்ணாவின் நண்பர்
2008 குசேலன்
2009 பாடிக்காதவன்
2009 வைகை
2010 அம்பாசமுத்திரம் அம்பானி கார்த்தி
2010 விருந்தாளி பார்த்திபன்
2012 விளையாட வா குணா
2012 பாண்டி ஒலிப்பெருக்கி நிலயம்
2013 பட்டத்து யானை
2015 கலை வேந்தன்
2015 144
2016 நனையாதே மழையே
2016 அட்ரா மச்சான் விசிலு
2016 பட்டதாரி
2016 கோடம்பாக்கம் கோகிலா
2017 கனவு வாரியம்
2017 காதல் காலம்
2017 அராசகுலம்
2017 சவரிக்காடு
2018 குலேபகாவலி மாரி
2018 பக்கா
2019 கண்ணே கலைமானே கமலகண்ணனின் நண்பர்
2019 என் காதலி சீன் போடுறா
2019 உதய்
2020 என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா
2020 திரௌபதி பாய்
2020 கொம்பு
2021 மைக்கேல்பட்டி ராஜா
2022 பெஸ்டி சங்கர்

குறிப்புகள் தொகு

  1. "K.Sankaranarayanan | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam".
  2. "Comedian Weds". Top 10 Cinema. 18 June 2012. Archived from the original on 27 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. https://www.youtube.com/watch?v=YnNy5YlUu4o
  4. ""அஜித் சார் ரொம்ப அப்செட்... ஷூட்டிங்கே நடத்தவேண்டாம்னு சொல்லிட்டார்!" - `அம்பானி' சங்கர்". Vikatan.
  5. "Ambasamudram Ambani is worth a watch". Rediff.
  6. "AMBASAMUTHIRAM AMBANI REVIEW - TAMIL MOVIE AMBASAMUTHIRAM AMBANI REVIEW".
  7. "Ambasamuthiram Ambani". Sify. Archived from the original on 2016-02-01. பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.
  8. "Differently-abled actor strikes gold in Para Badminton". Deccan Chronicle. 12 December 2017.
  9. "இந்தியாவுக்கு பெருமை சேர்க்க ரெடியான காமெடியன்: பேட்மிண்டனில் தங்கம் வென்று அசத்தல்!". Samayam Tamil.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பானி_சங்கர்&oldid=3541156" இலிருந்து மீள்விக்கப்பட்டது