கனவு வாரியம்
கனவு வாரியம் (Kanavu Variyam) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இதை அருண் சிதம்பரம் எழுதி இயக்கியிருந்தார். மேலும், டிசிகேஏபி சினிமாஸ் தயாரித்தது. இந்த படத்தில் அருண் சிதம்பரம் ஜியா ஷங்கருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாடு கிராமங்களில் மின்வெட்டு, மின் பற்றாக்குறையை சுற்றி கதை நகர்கிறது.[1][2] முக்கியமாக புதிய நடிகர்களையும், குழுவினரையும் கொண்ட இந்த திரைப்படம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தென்னிந்திய திரைப்படமாக விநியோகிக்கப்பட்டது.[3][4]
கனவு வாரியம் | |
---|---|
இயக்கம் | அருண் சிதம்பரம் |
தயாரிப்பு | மருத்துவர் ஏ. சிதம்பரம் கார்த்திக் சிதம்பரம் |
கதை | அருண் சிதம்பரம் |
இசை | ஷியாம் பெஞ்சமின் |
நடிப்பு | அருண் சிதம்பரம் ஜியா சங்கர் யோக் ஜேபி இளவரசு பாண்டி செந்தில்குமாரி |
ஒளிப்பதிவு | எஸ். செல்வகுமார் |
படத்தொகுப்பு | கௌகின் |
கலையகம் | டிசிகேஏபி சினிமாஸ் |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 24, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன்னர், இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றது.[5] அதன் விருதுகளில், சிறந்த சுதந்திர நாடகத் திரைப்படத்திற்கான பிளாட்டினம் ரெமியை வென்றது . 49வது உலகில் சிறந்த ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இந்த படம் இந்தியாவில் தேசிய அறிவியல் திரைப்பட விழா மற்றும் போட்டியில் சிறப்பு நடுவர் விருதை வென்றது.[6][7] கனவு வாரியம் 24 பிப்ரவரி 2017 அன்று இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டது.
நடிப்பு
தொகு- எழிலாக அருண் சிதம்பரம்
- வீணாவாக் ஜியா சங்கர்
- எழிலின் தந்தையாக இளவரசு
- கோபியாக யோக் ஜேபி
- சக்கரையாக பாண்டி
- எழிலின் தாயாக செந்தில்குமாரி
- ஞானசம்பந்தமாக கு. ஞானசம்பந்தன்
- டி. பி. கஜேந்திரன்
- மயில்சாமி (நடிகர்)
- கவிதாலயா கிருஷ்ணன்
- கிரேன் மனோகர்
- ஜார்ஜ் மரியன்
- 'லொல்லு சபா' ஈஸ்டர்
- அம்பானி சங்கர்
- சரவண சுப்பையா
- ஆறுமுகம்
வரவேற்பு
தொகுதிரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக, படம் உலகெங்கிலும் உள்ள முக்கிய திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. தி இந்து, என்டிடிவி, தினத்தந்தி உள்ளிட்ட செய்தி இணையதளங்கள் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சிகளை மிகவும் பாராட்டியதுடன், "அருண் கவனிக்க வேண்டிய இயக்குநர்" என்று குறிப்பிட்டது.[8][9]
சான்றுகள்
தொகு- ↑ http://movies.ndtv.com/regional/chennai-techie-wins-usas-prestigious-remi-award-for-debut-film-1279151
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/Kanavu-Variyam-Wins-Remi-Award-at-WorldFest/2016/02/18/article3282643.ece
- ↑ "Warner Bros Pictures To Distribute Its First Ever Tamil Film". http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/warner-bros-to-release-their-first-tamil-film-titled-kanavu-variyam.html.
- ↑ "Independent Tamil film gets backing of H'wood studio". http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/independent-tamil-film-gets-backing-of-hwood-studio/articleshow/56803688.cms.
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-film-on-power-cuts-in-villages-goes-places/article8255166.ece
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Chennai-filmmakers-win-awards-at-WorldFest/articleshow/52009899.cms
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-film-on-power-cuts-in-villages-goes-places/article8260190.ece
- ↑ "Chennai techie's maiden film wins laurels in US" (in en-US). dtNext.in. 2016-02-21 இம் மூலத்தில் இருந்து 2016-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161116225649/http://www.dtnext.in/News/City/2016/02/21112445/Chennai-techies-maiden-film-wins-laurels-in-US.vpf.
- ↑ "NDTV". http://movies.ndtv.com/tamil/kollywood/kanavu-variyam-movie-teaser-1655927.