பேரரசு (திரைப்படம்)

பேரரசு (Perarasu) விஜயகாந்த், டெபினா பானர்ஜி, பிரகாஷ் ராஜ், சரத் பாபு, பாண்டியராஜன், ஆனந்த் ராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் பிரவீண் மணி இசையமைப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். உதயன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கலப்படமற்ற வழக்கமான நல்ல காவல்துறையினருக்கும், கெட்டவர்களுக்கும் இடையே நடக்கும் கதையம்சம் கொண்ட மசாலா திரைப்படம். பேரரசு விஜயகாந்தின் முந்தைய படங்களான வல்லரசு, புலன் விசாரணை போன்ற திரைப்படம்தான். அதை ஒவ்வொரு சட்டகத்திலும் காணமுடியும். சட்டத்தை காப்பவர், அழிப்பவர் என இரு கதாபாத்திரங்களை விஜயகாந்த் ஏற்றிருந்தார். சண்டை காட்சிகளில் பறந்து பறந்து உதைத்தாலும் ரத்தமின்றி கோரமான முறையில் இல்லாமல் இருந்தது.

பேரரசு
இயக்கம்உதயன்
தயாரிப்புகாஜா மொய்தின்
கதைஉதயன்
இசைபிரவீண் மணி
நடிப்புவிஜயகாந்த்
டெபினா பானர்ஜி
பிரகாஷ் ராஜ்
சரத் பாபு
பாண்டியராஜன்
ஆனந்த் ராஜ்
நாசர்
மன்சூர் அலிகான்
விநியோகம்5 ஸ்டார்
வெளியீடு14 செப்டம்பர் 2006
ஓட்டம்2 மணி 22 நிமிடம்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு8 கோடிகள்

இது துப்பறியும் கதையை அடிப்படையாக கொண்டது. மையப்புலனாய்வுச் செயலக (சி.பி.ஐ) அதிகாரியான காசி விசுவநாத் (விஜயகாந்த்) மர்மமான முறையில் காணாமல் போன நீதிபதி சதாசிவத்தை (நாசர்) கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்கிறார். காசி விசுவநாதனுடன் இளைய அதிகாரிகளான கேசவன் நாயர் (ஆனந்த் ராஜ்), காவலர் (பாண்டியராஜன்) ஆகியோர் குழுவாக நியமிக்கப்படுகின்றனர்.

விரைவில் மாநில அமைச்சரான இலக்கியம் (பிரகாஷ் ராஜ்) மூன்று உயர் காவல்துறை அதிகாரிகள் உதவியோடு நகர்த்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் பின்னால் இருப்பதை காசி கண்டுபிடிக்கிறார். திடிரென மூன்று காவல்துறை அதிகாரிகளும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட, இதனை செய்வது காசி போல் தோற்றமுள்ள ஒருவர் இருப்பது தெரிகிறது. காசியின் இரட்டை சகோதரனான, பேரரசு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் கொல்லப்பட்டது தெரியவருகிறது.

பாஞ்சாலங்குறிச்சியில் தலைவனை தேர்ந்தெடுக்கும் கிராம தலைவர் (சரத் பாபு) இரண்டு மகன்களோடு வாழ்ந்து வருகிறார். மன்சூர் அலிகான் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக காரணமான சரத்பாபுவை கொல்கின்றனர். இதை நேரில் பார்த்த பேரரசு பழிவாங்க துடிக்கிறார். அவர்களிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றிய சந்திரசேகர் மூலம் தெரிந்து கொள்கிறார்.

கடைசியில் இலக்கியன் இருக்கும் நாற்காலிக்கு அடியில் வெடிகுண்டை பொருத்துகிறார். காசி, இலக்கியனை காப்பாற்ற வேண்டியிருப்பதால், இலக்கியனின் அறைக்கு சென்று அவருடன் சேர்ந்து சாகவும் துணிகிறார். காசி தன் வேலைக்காக தன் உயிரையும் விட துணிந்ததை நினைத்து பேரரசு பெருமையடைகிறார். அதனால் இருவரையும் காப்பாற்றுகிறார் ஆனால் இலக்கியன் அவரை சுட்டுவிடுகிறான். காசி இலக்கியனை சுட்டுவிடுகிறார் பேரரசு பழியை ஏற்றுகொண்டு உயிரை விடுகிறார். கடைசியில் காசி கதாநாயகியை கல்யாணம் முடித்து தான் பிறந்த கிராமத்திற்கு திரும்புகிறார்.

நடிப்பு

தொகு
  • இலக்கியனாக பிரகாஷ் ராஜ்
  • கந்தசாமியாக பாண்டியராஜன்
  • கேசவனாக ஆனந்த் ராஜ்
  • பேரரசு/காசிவிசுவநாதனாக விஜயகாந்த்
  • ஜாஸ்மினாக ரகசியா
  • சரத் பாபு
  • டெபினா பானர்ஜி
  • நாசர்
  • மன்சூர் அலிகான்
  • ரியாஸ் கான்

வசூல்

தொகு

விஜயகாந்த் ரமணா படத்திற்கு பின் பெரிய வெற்றிபடமாக பேரரசு அமைந்தது. இந்தியா முழுவதும் 90% தொடக்கம் கிடைத்தது. 8 கோடி செலவில் எடுக்கப்பட்டு 14 கோடி அறுவடை செய்து வணிக ரீதியாக வெற்றியடைந்தது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரசு_(திரைப்படம்)&oldid=3700538" இலிருந்து மீள்விக்கப்பட்டது