பெஸ்டி (Bestie) என்பது 2022-இல் டாக்டர். ஆர். சாரதி ராஜா தயாரிப்பில் இயக்குநர் ரங்கா எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் மொழி திகில் திரைப்படமாகும். இப்படத்தில் யாசிகா ஆனந்த் மற்றும் அசோக் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேசு, வாசு விக்ரம் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1]

பெஸ்டி
இயக்கம்ரங்கா
தயாரிப்புடாக்டர். ஆர். சாரதி ராஜா
கதைரங்கா
திரைக்கதைரங்கா
இசைஜே.வி.
நடிப்புயாசிகா ஆனந்த்
அசோக் குமார்
பாடலாசிரியர்விவேக்
ஒளிப்பதிவுஆர். ஆனந்த்
படத்தொகுப்புராம் கோபி
யஸ்வந்தன்
கலையகம்ஆர்.எஸ்.சினிமா
வெளியீடு8 ஜூலை 2022
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

காதலர்களான அசோக் மற்றும் யாஷிகா விடுமுறைக்கு செல்ல முடிவு செய்து, அவர்கள் ஒரு பண்ணை வீட்டில் தங்க சென்றனர். அவர்கள் அந்நியர்களை சந்தித்தனர், காதலர்கள் இருவருக்கும் குழப்பமான விஷயங்கள் நடந்தன. யாஷிகாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அதைச் செய்ததுதான் அசோக்கிற்கு மிகவும் ஏமாற்றம். அந்நியர்கள் யாஷிகாவின் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் யாஷிகாவின் சகோதரி பிரியங்காவை கற்பழித்ததால் அசோக்கையும் அவரது நண்பர்களையும் பழிவாங்க திட்டமிட்டனர். அவர்களின் திட்டத்தின்படி, யாஷிகாவும் அவரது குடும்பத்தினரும் அசோக் மற்றும் அவரது நண்பர்களைக் கொன்றனர்.

நடிகர்கள் தொகு

நடிகர் கதாப்பாத்திரம் குறிப்பு
யாசிகா ஆனந்த் யாசிகா
அசோக் குமார் அசோக்
லொள்ளு சபா மாறன் மதன்
லொள்ளு சபா சேசு மெய்யப்பன்
வாசு விக்ரம் பங்களாவின் காவலாளி
பயில்வான் ரங்கநாதன் மு. அன்பழகன் (காவல் ஆய்வாளர்)
அம்பானி சங்கர் சங்கர்
சத்யன்
லொள்ளு சபா ஜீவா ஜீவா சிறப்பு தோற்றம்
அஸ்வினி சந்திரசேகர் பிரியங்கா (கால்நடை மருத்துவர் மற்றும் யாசிகாவின் அக்கா)

இசை தொகு

பாடல் வரிகளை எழுதியவர் விவேக் மற்றும் வேணுஜி. இத்திரைப்படத்திற்கு ஜே. வி. இசையமைத்துள்ளார்.

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் இசையமைப்பாளர்
"ரகசிய ராணா" சைந்தவி வேணுஜி ஜே.வி.
"உன்னை போல" ஆஜித், கேப்ரியல்லா விவேக் ஜே.வி.

தயாரிப்பு தொகு

டாக்டர். ஆர். சாரதி ராஜா, ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனத்தின் மூலம் இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தினை ரங்கா எழுதி, இயக்கியுள்ளார்.[2]

திரைப்பட வெளியீடு தொகு

8 ஜூலை 2022-ல் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. BESTIE Official Trailer - Yashika Aannand | Ashok | Ranga, retrieved 2022-06-23
  2. "Bestie Movie (2022): Release Date, Cast, Review, Trailer, Story, Budget, Box Office Collection" (in en). https://www.filmibeat.com/tamil/movies/bestie.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஸ்டி&oldid=3669222" இருந்து மீள்விக்கப்பட்டது