திரௌபதி (2020 திரைப்படம்)

மோகன் ஜி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

திரௌபதி (Draupathi) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[2] இப்படம் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குநர் மோகன் ஜியால் எழுதி, இயக்கி மற்றும் தயாரிக்கப்பட்ட தமிழ் மொழி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்து மற்றும் மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்கிறார்.[3] இது தமிழ் திரையுலகில் கூட்டுத் தயாரிப்பு (crowd funding) மூலம் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும்.[4]

திரௌபதி
இயக்கம்மோகன் ஜி
தயாரிப்புமோகன் ஜி
கதைமோகன் ஜி
இசைஜூபின்
நடிப்புரிச்சர்ட் ரிசி
சீலா ராஜ்குமார்
கருணாஸ் மறுமலர்ச்சி பாரதி
ஒளிப்பதிவுமனோஜ் நாராயண்
படத்தொகுப்புதேவராஜ் எஸ்
விநியோகம்ஜி. எம் பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடு28 பிப்ரவரி, 2020
ஓட்டம்2 மணி 39 நிமிடம்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு50 லட்சம்[1]

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வட சென்னையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த போலித் திருமணங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த படம் பழைய வண்ணாரப்பேட்டைக்கு பிறகு இயக்குநர் மோகனுக்கும், ரிச்சர்ட் ரிசிக்கும் இடையிலான இரண்டாவது படமாகும். இப்படம் சென்னை, வேலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் போன்ற வடதமிழகத்தில் வாழுகின்ற மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி எடுக்கப்பட்ட படமாகும்.[5] இது ஒரு கூட்டுத் தயாரிப்பு தமிழ்த் திரைப்படமாகும்.

முன்னோட்டம்

தொகு

சனவரி 03, 2020 அன்று இத்திரைப்படத்தின் முன்னோட்டம் யூடியூப்பில் வெளியானது. முன்னோட்டம் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் 2 ஆம் இடம் பிடித்தது.[சான்று தேவை]

சர்ச்சைகள்

தொகு

சாதிகள் உள்ளதடி பாப்பா..சர்ச்சையை கிளப்பிய திரௌபதி முன்னோட்டம் சமூக வலையதளங்களில் வேகமாக பரவி வந்தது. சாதியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் மத்தியில் ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் நிலவி வருகிறது.[6]

வெளியான நாள்

தொகு

திரௌபதி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்றும் பிப்ரவரி 28, 2020 ஆம் நாள் திரைப்படம் வெளியானது.

திரைப்படம் வெளியீடு

தொகு

50 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது, பிப்ரவரி 28, 2020 அன்று தமிழகம், கருநாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட சுமார் 300 திரையரங்கிற்கு மேல் வெளியிடப்பட்டது.

சிறப்பு  காட்சி

தொகு

இந்த திரைப்படம் பல அரசியல் தலைவர்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடபட்டது. ச. இராமதாசு, எச். ராஜா, அர்ஜூன் சம்பத், கொங்கு ஈஸ்வரன் மற்றும் கே. டி. ராஜேந்திர பாலாஜி ஆகிய தலைவர்கள்  இதில் அடங்குவர்.[7][8][9][10] பெண்மையை கொண்டாடும் விதமாக சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தன் அலுவலக பெண் ஊழியர்களுடன் சென்று இந்த திரைப்படத்தை கண்டுகளித்தார்.[11] சிறப்பு காட்சியாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் பெண்களுக்காக இலவசமாக  திரையிடபட்டது.[12][13]

வரவேற்பு மற்றும் வசூல்

தொகு

திரௌபதி திரைப்படம் மக்களிடம் நல்ல  வரவேற்பை  பெற்றது.[14][15] முதல்நாளில் மொத்தமாக 2 கோடி ரூபாய் வசூல்  செய்தது. இது இந்த படத்தின் ஆக்கச்செலவை விட நான்கு மடங்கு அதிகம் என சொல்லப்படுகிறது.[14][16] இந்த வசூல் சாதனை நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் இதுவே  முதல் முறை  என்று  சொல்லப்படுகிறது.[16] மொத்தமாக தமிழ்நாட்டில்  மட்டும்  14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இத்திரைப்படம்.[17][18]

மேற்கோள்கள்

தொகு
  1. "திரௌபதி வசூல்..! ஒரு கோடிப்பே..! குலுங்கிய திரையரங்குகள்". பாலிமர் (பிப்ரவரி 29, 2020)
  2. "டிரைலரை வெளியிட்ட திரௌபதி படக்குழு". Archived from the original on 2020-02-18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.News J(சனவரி 04, 2020)
  3. "draupathi".
  4. "'திரெளபதி' படக்குழுவினரை வாழ்த்தினாரா அஜித்?".இந்து தமிழ் திசை (13 சனவரி, 20 )
  5. "A film on Chennai's 2013 fake marriage cartel". Times of india (நவம்பர் 10, 2019)
  6. "சாதிகள் உள்ளதடி பாப்பா... சர்ச்சையை கிளப்பும் "திரௌபதி" டிரைலர்!". Archived from the original on 2020-02-18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.ஒன் இந்தியா தமிழ்(சனவரி 05, 2020)
  7. "திரௌபதி படத்தை பாராட்டிய தமிழக அமைச்சர்!". Madhimugam (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-11. Archived from the original on 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  8. "ஹெச்.ராஜா- ராமதாஸை ஒன்றிணைத்த திரெளபதி... திருமாவை தனித்துவிட்ட கன்னிமாடம்..!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  9. "பெற்றோர் முன்பே அனைத்து திருமணங்களும் நடைபெற வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் | All marriages must take place before the parents - Ramadas, founder of pmk | News7 Tamil". ns7.tv. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. ""காதல் - நாடகக் காதல் வித்தியாசம் என்ன?"- 'திரௌபதி' படம் பார்த்த பின்னர் எச்.ராஜா விளக்கம்!!". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  11. "அலுவலக பெண் ஊழியர்களுடன் 'திரௌபதி' படத்தை பார்த்த கிரண் பேடி". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  12. User, Super. "திரௌபதி திரைப்படத்திற்கு பெண்களுக்கான சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு". Newsj (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2020-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05. {{cite web}}: |last= has generic name (help)
  13. "பட்டைய கிளப்பிய திரௌபதி..! பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி அதிரடி..!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  14. 14.0 14.1 "வரவேற்பு மற்றும் வசூல்: 'திரெளபதி' படக்குழுவினர் மகிழ்ச்சி". Hindu Tamil Thisai (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  15. V.Thangavel (2020-02-29). "சாதி வெறியை வெளிப்படுத்தும் பிபிசி தமிழ் 'திரௌபதி' விமர்சனம்.!". kathir.news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. 16.0 16.1 "திரௌபதி: வசூல் நிலவரம்!". மின்னம்பலம். பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  17. "கொரோனாவிடம் இருந்து தப்பிய "திரெளபதி"... மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா?". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  18. "தமிழ்நாட்டில் திரௌபதி படத்தின் 10 நாள் இமாலய பாக்ஸ் ஆபிஸ் வசூல் I Diraupathi Huge 10 Days Box Office Collections In Tamilnadu". Behindwoods. 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரௌபதி_(2020_திரைப்படம்)&oldid=4160981" இலிருந்து மீள்விக்கப்பட்டது